இதுதான் கிரிக்கெட்.. வைபவ் சூர்யவன்ஷியால் அதிகரிக்கும் பிரஷர்.. பாவம் சஞ்சு, ஸ்ரேயாஸ் ஐயர், கம்பீர்!

  • மும்பை: இந்திய டி20 அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு மிகப்பெரிய பிரஷர் எழுந்துள்ளது. அந்த பிரஷருக்கு காரணமாக வைபவ் சூர்யவன்ஷி அமைந்துள்ளார். ஒவ்வொரு போட்டியின் போதும் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இருக்கிறாரா என்பதை காணவே ஒரு மிகப்பெரிய கூட்டம் உருவாகி இருக்கிறது.

    Advertisement

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 778 ரன்களை விளாசி தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். ஐபிஎல் தொடருக்கு இடையிலேயே வைபவ் சூர்யவன்ஷி குறித்த பில்டப் உலகம் முழுவதும் அதிகரிக்க தொடங்கியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை முன்னாள் வீரர்களும், ஜாம்பவான்களும் கொண்டாட தொடங்கிவிட்டார்கள்.

    Advertisement

    இதனால் இந்திய டி20 அணியிலும் வைபவ் சூர்யவன்ஷியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனை அஜித் அகர்கரே ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டிய சூழலை அவரின் ஆட்டம் மூலம் உருவாக்கிவிட்டார். தற்போது அஜித் அகர்கர் அந்த பிரஷரை அப்படியே இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பக்கம் திருப்பிவிட்டுள்ளார்.

    ஏனென்றால் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ள அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வந்துள்ள சூழலில், ஒரு கேப்டனாக வீரர்களுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு எழுந்துள்ளது. அதேபோல் தான் ஒரு நல்ல கேப்டன் என்பதையும் நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

    Advertisement

    அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் அசத்திய சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இப்படியான சூழலில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய என்ற பிரஷர் எழுந்துள்ளது. இதனை சமாளிக்க வேண்டிய சூழலில் இந்திய அணி நிர்வாகம் இல்லை.

    இது போதாதென்று சஞ்சு சாம்சன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி 3 இன்னிங்ஸில் அபிஷேக் சர்மா 2 அரைசதங்கள் அடித்து தப்பித்துவிட்டார். இதனால் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவரை நீக்க வேண்டிய சூழல் உள்ளது. விரைவில் வைபவ் சூர்யவன்ஷி தனது ஆட்டம் மூலமாகவே அந்த முடிவை நோக்கி இந்திய அணியை நகர்த்துவார். இதனால் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விரைவில் ஃபார்முக்கு திரும்புவது நல்லது என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Sanju Samson: How Vaibhav Sooryavanshi is giving pressure to Sanju Samson, Shreyas iyer and Gautam Gambhir