யப்பா கவர்ஸில் அந்த சிக்ஸ்.. கிளாசிக் பேட்ஸ்மேன்டா சஞ்சு சாம்சன்.. தோனி ஊரில் தரமான சம்பவம்!

  • ராஞ்சி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தி உள்ளார். தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 82 ரன்களை விளாசி இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ராஞ்சி மண்ணில் நடைபெற்று வருகிறது. பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்பதால், ரசிகர்களிடையே இந்திய பேட்ஸ்மேன்கள் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. அதற்கேற்ப டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

    Advertisement

    அபிஷேக் சர்மா முதல் ஓவரில் இருந்தே சரவெடியாய் வெடிக்க, சஞ்சு சாம்சன் 6 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு கேட்ச் கொடுத்தார். அதனை பூரன் தவறவிட, இதன்பின் ஆட்டம் சஞ்சு சாம்சனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதனையடுத்து அகீல் ஹொசைன் பந்தில் சஞ்சு சாம்சன் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார்.

    அதிலும் அகீல் ஹொசைன் வீசிய 5வது ஓவரில் 4, 6, 6, 4 என்று விளாச, இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. தொடர்ந்து ரொமாரியோ ஷெப்பர்ட் பந்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி 21 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்த அத்தனை போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    Advertisement

    தொடர்ந்து அதிரடியில் பொளந்து கட்டிய சஞ்சு சாம்சன் கவர்ஸ் திசையில் அடித்த சிக்ஸ் ஒன்று கவிதையை போல் அமைந்தது. இந்த போட்டியின் ஷாட் ஆஃப் தி மேட்ச் விருதையே கொடுக்கலாம். பின்னர் சஞ்சு சாம்சனுக்கு நீண்ட நேரமாக ஸ்ட்ரைக் கிடைக்கவில்லை. இதனால் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 82 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்து வெளியேறிய போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஏசியன் கேம்ஸில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் மீது விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் சஞ்சு சாம்சன் ஒவ்வொரு 3 போட்டிக்கும் ஒரு முறை தரமான சம்பவம் செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    English Summary

    Sanju Samson: Sanju Samson Scored a 21 ball fifty against West Indies in the 2nd T20 at Ranchi