திருமணம் முன்பே பிரேக் அப்.. எப்படிபட்ட கணவரை எதிர்பார்க்கிறீங்க? சாரா டெண்டுல்கர் ஓபன் டாக்!

  • மும்பை: தன்னுடைய வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் முதல்முறையாக மனம் திறந்துள்ளார். அப்பா, அம்மா கணவர் மனைவி என்பதை விடவும், நல்ல நண்பர்களாக இருப்பதாக கூறிய சாரா டெண்டுல்கர், எனக்கும் ஒரு நண்பர் கணவராக வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரும், இந்திய கிரிக்கெட் கேப்டன் சுப்மன் கில்லும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருகின்றனர். மும்பையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இவர்கள் ஒன்றாக பங்கேற்று இருக்கின்றனர். ஆனாலும் சாரா - சுப்மன் கில் இதுவரை பொது வெளியில் காதலை அறிவிக்கவில்லை.

    Advertisement

    அதேபோல் சாரா - சுப்மன் கில் காதலுக்கு இருவரின் வீட்டிலும் ஒப்புதல் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே சாரா டெண்டுல்கர் தொடர்ந்து சுப்மன் கில் விளையாடும் போட்டிகளை நேரில் பார்க்க வருகிறார். அண்மையில் சாரா டெண்டுல்கரின் தம்பி அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

    அப்போதே அக்காவை விட்டு தம்பிக்கு திருமணமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் சாரா டெண்டுல்கர் முதல்முறையாக திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில் சாரா டெண்டுல்கர் பேசுகையில், அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணம் எனக்கு ஒரு ட்ரையல் ரவுண்ட் என்றே சொல்ல வேண்டும். அந்த திருமணத்தின் மூலமாக எனக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்ற தெளிவு கிடைத்துவிட்டது.

    Advertisement

    முன்பெல்லாம் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இப்போது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சூழல் இருந்தால் போதும் என்று நினைக்கிறேன். எனக்கு துலாம் ராசி.. அதனால் முடிவு எடுக்க கொஞ்சம் குழப்பிக் கொள்வேன். என்னை பொறுத்தவரை என்னுடைய அம்மா, அப்பா இருவருமே திருமணத்திற்கு முன்பு இருந்தே நண்பர்கள் தான்.

    அப்போதும் நண்பர்களாகவே இருக்கின்றனர். எந்தவித ஈகோ இல்லாமல் இயல்பான கணவராக இருக்க வேண்டும் என்பதே ஆசை.. இந்த ஜென் ஸி தலைமுறை அவர்களின் காதல் பிரச்சனைகளில் தைரியமாக முடிவு எடுக்கிறார்கள். தனக்கு செட்டாகவில்லை என்றால், உடனடியாக உறவை முறித்து கொள்வதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை.

    Advertisement

    சில நேரங்கள் நிச்சயதார்த்தம் முடிவடைந்த பின்னரும் கூட, அந்த பையனின் குடும்பம் சரியில்லை என்று தெரிய வந்தால், உடனடியாக பிரேக் அப் செய்துவிடுகிறார்கள். லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் எப்படி அந்த காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருந்தது என்ற ஆச்சரியம் இப்போதும் இருக்கிறது. என்னை பொறுத்தவரை நல்ல நண்பராக இருந்தால் மட்டுமே, அவர் சோல்மேட்டாக மாற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Sara Tendulkar: Sachin daughter Sara Tendulkar Expectations for Her Future Husband