ஜஸ்ட் மிஸ்.. ஸ்ரேயாஸ் ஐயரை பொளந்து கட்டிருப்பாங்க.. ஜப்பானுடன் பவுலர்களால் தப்பித்த இந்திய அணி!

  • கான்டோ: ஜப்பான் அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்ட சூழலில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்பின் களமிறங்கிய ஜப்பான் அணி 5 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

    Advertisement

    ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1 டி20 போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதமாகியது. தொடர்ந்து மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததன் காரணமாக ஆட்டம் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இதன்பின் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    Advertisement

    இதனையடுத்து தொடக்க வீரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேற, நட்சத்திர வீரர் இஷான் கிஷன் 6 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிட்சில் ஸ்விங் மற்றும் டர்ன் இருந்ததால், பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க தடுமாறினார். பின்னர் சஞ்சு சாம்சன் 7 பந்தில் 9 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 12 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 3 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார்.

    ஜப்பான் அணி தரப்பில் சார்லி ஹர ஹிங்கே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து இந்திய அணி வெல்லுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பின் ஜப்பான் அணி பேட்டிங்கை தொடங்கியது. அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை சிக்கனமாக வீச, வாஷிங்டன் சுந்தர் 2வது ஓவரில் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். பிஷ்னாய் 10 ரன்கள் விட்டுக் கொடுக்க, வாஷிங்டன் சுந்தர் 4வது ஓவரில் 7 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

    Advertisement

    கடைசி ஓவரில் ஜப்பான் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட போது, 6 5 ரன்களை மட்டுமே இந்திய அணி வெற்றி கொடுத்தது. அக்சர் படேல் கடைசி ஓவரில் வேகம் மற்றும் டர்னை பயன்படுத்தி ஜப்பான் பேட்ஸ்மேன்களை தடுமாற செய்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தால், அது வரலாற்று தோல்வியாக அமைந்திருக்கும்.

    அதேபோல் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தொடங்கி அத்தனை பேரும் சொதப்பலோ சொதப்பலாக ஆடியது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கொஞ்சமாவது ஸ்விங்காகும் பிட்ச்களில் விளையாடி பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    English Summary

    Shreyas Iyer: India won by 2 runs against Japan and Indian fans Criticizing Shreyas Iyer for his batting