7,000 ரன்கள்.. டி20 கிரிக்கெட்டில் மெகா சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்.. மகுடத்தை எட்டிய மக்கள் கேப்டன்!

  • லக்னோ: டி20 கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை குவித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையை படைத்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்களை எடுத்த போது ஸ்ரேயாஸ் ஐயர் இந்த மைல்கல்லை எட்டினார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய இங்லிஸ் 44 பந்துகளில் 72 ரன்களை எடுத்து அசத்தினார்.

    Advertisement

    இதன்பின் பஞ்சாப் அணிக்காக பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. லக்னோ அணி சார்பாக முதல் ஓவரை வீசிய முகமது ஷமி, முதல் பந்திலேயே பிரியன்ஷ் ஆர்யா விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து வந்த கூப்பர் கானலியும் 10 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் பேட்டிங் பொறுப்பு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலையில் விழுந்தது.

    அதற்கேற்ப நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், தேவையான நேரத்தில் பவுண்டரிகளையும் விளாசினார். ஒரு கட்டத்தில் அதிரடியாக சில சிக்சர்களையும் விளாசி அசத்தினார். இதனால் 33 பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதத்தை எட்டினார். மறுபக்கம் பிரப்சிம்ரன் சிங்கும் அதிரடியாக விளையாடி அரைசதத்தை எட்டினார். இதனால் பஞ்சாப் அணி எளிதாக வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

    Advertisement

    இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களை எடுத்த போது பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை எட்டி ஸ்ரேயாஸ் ஐயர் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறார். இந்திய டி20 கிரிக்கெட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வரும் சூழலில், இந்த சாதனை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோல் கடந்த 2 சீசன்களாக ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்ட்ரைக் ரேட்டும் உச்சத்தில் இருக்கிறது. ஸ்பின்னர்கள் மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் விளாசத் தொடங்கியதே இந்த மாற்றத்திற்கு காரணமாக உருவாகியது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Shreyas Iyer: Shreyas Iyer Blasts Past 7,000 T20 Runs! Punjab Kings Captain Hits Historical Milestone in IPL 2026