கேப்டனாக சுப்மன் கில் அசுர வேட்டை.. 15 இன்னிங்ஸ்களில் 6வது சதம் அடித்து மிரட்டல்.. நெகிழ்ந்த தந்தை!

  • சண்டிகர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது 11வது சதத்தை விளாசி அசத்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ள 15 இன்னிங்ஸ்களில், சுப்மன் கில் தனது 6வது சதத்தை விளாசி அசத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் சுப்மன் கில் சதம் அடித்ததால் அவரின் தந்தை நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

    Advertisement

    ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 368 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய கேப்டன் சுப்மன் கில் 103 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 50 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

    Advertisement

    கேஎல் ராகுல் 100, சாய் சுதர்சன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் கேப்டனும் ரன் மெஷினுமான சுப்மன் கில் அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை சர்வதேச அரங்கில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். அதிரடியாக விளையாடிய அவர், ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து மிக முக்கிய மைல்கல் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தியுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு, சுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
    ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சுப்மன் கில் அடிக்கும் 11-வது சதம் இதுவாகும். இதன் மூலம் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

    Advertisement

    இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அவர் களம் கண்ட 15 இன்னிங்ஸ்களில், இது அவரது 6-வது சதமாகும். அதாவது, கேப்டன்சி பொறுப்பு அவரது பேட்டிங்கை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பதோடு, அவரை மேலும் பொறுப்புடன் விளையாட வைத்துள்ளது என்பதை இந்த புள்ளிவிவரம் உணர்த்துகிறது.

    சுப்மன் கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தை சொந்த மண்ணில் அடித்ததால், போட்டியை நேரில் பார்த்த அவரது தந்தை லக்விந்தர் சிங் நெகிழ்ச்சி அடைந்தார். தனது மகனின் அசாத்திய உழைப்பையும், அவர் இந்திய அணியை வழிநடத்திச் சதம் அடிப்பதையும் பார்த்த அவர், எழுந்து நின்று கைகளைத் தட்டித் தனது மகிழ்ச்சியைக் கண்ணீர்மல்க வெளிப்படுத்திய தருணம் ரசிகர்களை நெகிழ வைத்தது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ஆயிரம் ரன்களை விளாசி புதிய சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக மிக குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் 2வது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் 14 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை விளாசி சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் உள்ளார்.

    English Summary

    Shubman Gill: Shubman Gill Smashes 11th International Ton; Registers 6th Century in Just 15 Innings as India Captain