7வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா.. இங்கிலாந்தை வீழ்த்தி புதிய வரலாறு!

  • லண்டன்: 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வென்று ஆஸ்திரேலியா மகளிர் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 151 ரன்கள் என்ற இலகை 17.1 ஓவர்களில் சேஸ் செய்து ஆஸ்திரேலியா அணி வென்றது. இதன் மூலமாக 7வது முறையாக டி20 உலகக்கோப்பை வென்று ஆஸ்திரேலியா மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

    Advertisement

    மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியால், இங்கில்காந்து அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது.

    Advertisement

    சவாலான இலக்கு இல்லை என்பதோடு, ஆஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்த இந்த ரன்கள் போதாது என்ற பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஆஸ்திரேலியா அணி பவர் பிளேவிலேயே 60 ரன்களை கடந்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனி ஒரு பக்கம் நிலையாக நின்று அதிரடியாக பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.

    இதனால் ஆஸ்திரேலியா அணி 17.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய மூனி 49 பந்துகளில் 10 பவுண்டரி உட்பட 64 ரன்களையும், லிட்ச்ஃபீல்ட் 35 பந்துகளில் 48 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 7வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

    Advertisement

    இதற்கு முன்பாக 2010, 2012, 2014, 2018, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே 50 ஓவர் உலகக்கோப்பையையும் ஆஸ்திரேலியா மகளிர் அணி 7 முறை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலமாக மொத்தமாக 14 ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்று ஆஸ்திரேலியா அணி பெஞ்ச் மார்க் வைத்திருக்கிறது.

    ஆஸ்திரேலியா மகளிர் அணியின் இந்த சாதனை ஆடவர் அணிகளுக்கு பொறாமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியா மகளிர் அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செய்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    English Summary

    T20 World Cup: Australia Women team won by 7 wickets against England in the T20 World Cup Final 2027