எப்படிலாம் மெசேஜ் அனுப்புவார் தெரியுமா.. யார் அந்த ராஜஸ்தான் வீரர்? நடிகை நேஹல் பரபரப்பு புகார்!

  • மும்பை: பிரபல இந்தித் தொலைக்காட்சித் தொடரான 'டாரக் மேத்தா கா ஊல்டா சஸ்மா' சீரியல் மூலம் பிரபலமான நடிகையான நேஹல் வதோலியா, ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் தனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    சமீபத்தில் 'சுனோ இந்தியா' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய போது நேஹல் இந்த அதிரடி தகவலைப் பகிர்ந்துள்ளார். அந்த கிரிக்கெட் வீரர் யார் என்ற விவாதங்கள் தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன. அந்த நேர்காணலின் போது, "உங்களுக்கு எப்போதாவது ஏதேனும் ஒரு கிரிக்கெட் வீரரிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் மெசேஜ்கள் வந்தது உண்டா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    Advertisement

    இதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த நேஹல், "அவருடைய பெயரை நான் சொல்லவா? அவர் அவ்வளவு பெரிய பிரபலம் கிடையாது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, தற்போது விவாகரத்தும் ஆகிவிட்டது" என்று ஒரு பெரிய க்ளூவை வீசியுள்ளார்.

    அவர் தொடர்ந்து பேசுகையில், "நான் இன்ஸ்டாகிராமில் போடும் ஸ்டோரிகளுக்கு அவர் அடிக்கடி ரிப்ளை செய்வார். 'நீங்க ரொம்ப ஹாட்டா இருக்கீங்க', 'பியூட்டிஃபுல்', 'பிரெட்டி' என்று தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வழிந்துகொண்டே இருப்பார்" என்று கூறியுள்ளார். நான் இப்போது அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினால் கூட, அவர் உடனடியாகத் தொடர்ந்து பேச ஆரம்பித்துவிடுவார்.

    Advertisement

    ஆனால் எனக்கு அவரிடம் பேச எந்த விருப்பமும் இல்லை. இதனாலேயே நான் மெசேஜ் செய்வதை நிறுத்தி, சில நாட்களுக்கு முன்பு அவரை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து முற்றிலும் பிளாக் செய்துவிட்டேன் என்று நேஹல் வதோலியா திட்டவட்டமாகக் கூறியுள்ளார். நடிகை நேஹல் வதோலியா அந்தப் பதிவில் குறிப்பிட்ட கிரிக்கெட் வீரரின் பெயரை நேரடியாக சொல்லவில்லை.

    இருப்பினும், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விவாகரத்தான நபர்" என்ற க்ளூவை நெட்டிசன்கள் பிடித்துக்கொண்டு தீவிரமாகத் தேடத் தொடங்கிவிட்டனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களுக்குத் தோன்றிய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Advertisement

    அண்மையில் குஜராத் நடிகரான கரண் ஜோஷி என்பவர் தனக்கு தவறான மெசேஜ்களை அனுப்பியதாக ஸ்கிரீன்ஷாட்களுடன் ஆதாரத்தை வெளியிட்ட நேஹல், தற்போது கிரிக்கெட் வட்டாரத்திலும் ஒரு புகாரைக் கிளப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ULLU இணையத் தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    ULLU Actor Nehal Vadoliya Claims a 'Divorced' Rajasthan Royals Cricketer Slid Into Her Instagram DMs