Vaibhav Suryavanshi: பொட்டு வச்ச தங்கக் குடம்.. லப்பர் பந்து சீனை ரீகிரியேட் செய்த வைபவ் சூர்யவன்சி! வீடியோவைப் பாருங்க!

  • சென்னை: ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிதறடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். குறிப்பாக, "லப்பர் பந்து" படத்தில் வரும் தினேஷ் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு, நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். "பொட்டு வச்ச தங்கக் குடம்" பாடலோடு அவரது வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    Advertisement

    2026 ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் பல அதிரடி போட்டிகள் நடந்திருந்தாலும், நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய இந்தப் போட்டியில், முழுக்க முழுக்க வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஷோ தான் பேசுபொருளாக மாறியது.

    Advertisement

    தொடக்கம் முதலே ஹைதராபாத் பவுலர்களை சூர்யவன்ஷி வெளுத்து வாங்கினார். மைதானத்தின் எல்லா திசைகளிலும் பந்தை பறக்கவிட்ட அவர், வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சதத்திலிருந்து வெறும் 3 ரன்கள் தூரத்தில் அவர் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

    இருந்தாலும், அந்த இன்னிங்ஸ் ஐபிஎல் வரலாற்றிலேயே நினைவில் நிற்கும் வகையில் அமைந்தது. அவரது இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, சில சிக்ஸர்கள் ரசிகர்களை இருக்கையில் இருந்து எழுந்து நிற்க வைத்தன. ஹைதராபாத் பவுலர்கள் யாராலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. "இது 15 வயது சின்னப் பையனின் பேட்டிங்கே இல்லை" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்த இன்னிங்ஸ் மூலம் சூர்யவன்ஷி பல சாதனைகளையும் உடைத்துள்ளார். பிளேஆஃப் போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில், சென்னை அணியின் சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். இருவரும் தலா 16 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்த சீசனில் மட்டும் 65 சிக்ஸர்கள் அடித்து, ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையையும் சூர்யவன்ஷி கைப்பற்றியுள்ளார்.

    இதற்கு முன்பு, 2012 சீசனில் கிறிஸ் கெய்ல் 59 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இப்போது சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். மேலும், ஒரு இன்னிங்சில் 10க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அதிகமுறை அடித்த வீரர்கள் பட்டியலிலும், கிறிஸ் கெய்லுடன் இணைந்து முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 4 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். பிளேஆஃப் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற புதிய சாதனையும் தற்போது சூர்யவன்ஷி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    இதற்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில் 10 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதோடு முடிவில்லை. இந்த சீசனில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் சூர்யவன்ஷி மாறியுள்ளார். முதல் 6 ஓவர்களில் மட்டும் அவர் 490 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு டேவிட் வார்னர் 467 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதேபோல், ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த அன்கேப்டு இந்திய வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி கைப்பற்றியுள்ளார்.

    இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சூர்யவன்ஷியை "லப்பர் பந்து" படத்தின் தினேஷ் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு கொண்டாடி வருகின்றனர். காரணம், அந்த படத்தில் தினேஷ் கதாபாத்திரம் கிரிக்கெட்டில் எதிரணியை அடித்து நொறுக்கும் போது, சதம் அடிக்கமால் அவுட்டானால், எதிரணியினர் கொண்டாடுவதை ரசிப்பது போல் இருக்கும்..

    Advertisement

    அதேபோல, நேற்று ஹைதராபாத் பவுலர்களை சூர்யவன்ஷி அடித்து துவம்சம் செய்த விதம், ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரத்தை நினைவூட்டியிருக்கிறது. "தினேஷ் ரியல் லைஃப்ல வந்துட்டாரே", "லப்பர் பந்து தினேஷ் = சூர்யவன்ஷி", "ஹைதராபாத்தை லப்பர் பந்து ஆக்கிட்டாரு" போன்ற மீம்ஸ்கள் தற்போது எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த அதிரடி வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2வது குவாலிஃபயர் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இப்போது அந்த அணியின் மிகப்பெரிய பலமாக சூர்யவன்ஷி பார்க்கப்படுகிறார். இதே ஃபார்மை தொடர்ந்தால், ராஜஸ்தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பும் அதிகம் என கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Vaibhav Suryavanshi’s explosive IPL knock sparks viral Lubber Pandhu memes across social media.