97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!

  • சண்டிகர்: ஐதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் விஸ்வரூபம் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி 3 ரன்களில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார். 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்த வைபவ் சூர்யவன்ஷி, சிக்ஸ் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஒரு நிமிடம் வைபவ் சூர்யவன்ஷி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மைதானமும் அமைதியானது.

    Advertisement

    ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கான அழுத்தத்தை வைபவ் சூர்யவன்ஷி எப்படி சமாளிப்பார் என்ற கேள்விகள் எழுந்தன.

    Advertisement

    ஆனால் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கூட கவலைப்படாமல் பேட் கம்மின்ஸ் தொடங்கி ஷகிப் ஹுசைன், இஷான் மலிங்கா, பிரஃபுல் ஹிங்கே உள்ளிட்ட அனைவரையும் விளாசி தள்ளினார். அதிலும் கம்மின்ஸை விளாசியது வியப்பை ஏற்படுத்தியது. அதிரடிக்கு மேல் அதிரடியாக ஆடிய அவர், 16 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.

    இதன்பின் சிக்ஸ், பவுண்டரியிலேயே டீல் செய்த வைபவ் சூர்யவன்ஷி, 28 பந்துகளில் 97 ரன்களை எட்டி இருந்தார். அப்போது ஒரேயொரு பவுண்டரி அடித்திருந்தால், வைபவ் சூர்யவன்ஷியால் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதத்தை விளாசி இருக்க முடியும். ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

    Advertisement

    இதனை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அடுத்த பந்தையும் சிக்ஸ் அடிக்க முயற்சித்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் 29 பந்துகளில் 12 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 97 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். வைபவ் சூர்யவன்ஷி ஆட்டமிழந்ததை ஏற்க முடியாமல் ஒட்டுமொத்த மைதானமும் சைலண்ட்டானது.

    வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர், யார் தான் சோகமாக இருக்க மாட்டார்கள்? என்று பேசத் தொடங்கிவிட்டார். அப்போது மைதானத்தில் ஆட்டமிழந்ததை ஏற்க முடியாமல் நின்றிருந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர். கொஞ்சம் கூட சுயநலமில்லாமல் சதத்தை நெருங்கிய போதும் அதிரடியை குறைக்காமல் ஆடிய வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

    English Summary

    Vaibhav Suryavanshi: Vaibhav Suryavanshi missed a well deserved Hundred by just 3 runs in the Eliminator with 97 runs from just 29 balls