ஆட்டம் முடிந்தும் அடங்காத கோபம்.. டிராவிஸ் ஹெட்டுடன் கைகுலுக்க மறுத்த விராட் கோலி.. என்ன நடந்தது?

  • ஐதராபாத்: ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் ஆர்சிபி ஜாம்பவான் வீரர் விராட் கோலி கைகுலுக்க மறுத்திருப்பது சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. இந்த சம்பவத்திற்கு முன் மைதானத்தில் இரு வீரர்களுக்கும் இடையில் காரசார மோதல் ஏற்பட்டது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதின. இப்போட்டியில் ஆர்சிபி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், ஆட்டத்திற்குப் பிந்தைய ஒரு பரபரப்பான நிகழ்வு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மைதானத்தில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, ஆர்சிபி நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரரான டிராவிஸ் ஹெட்டுடன் கைகுலுக்க மறுத்து, அவரை அப்படியே கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆர்சிபி அணி சேஸிங் செய்துகொண்டிருந்த போது இந்த மோதல் அரங்கேறியது.

    ஆர்சிபி இன்னிங்ஸின் தொடக்க ஓவர்களில் டிராவிஸ் ஹெட்டைப் பார்த்து விராட் கோலி ஏதோ சில வார்த்தைகளைக் கூறினார். விராட் கோலியை அவுட்சைடு எட்ஜ் எடுக்க பவுலருக்கு திட்டம் போட்டு கொடுத்தார். அதுதான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக ஆட்டமிழந்த ஸ்டைல்.
    ஆனால் அடுத்த பந்திலேயே விராட் கோலி ஒரு பவுண்டரியை விளாசினார்.

    Advertisement

    அப்போது விராட் கோலி, நீயும் வேணும்னா வந்து சில ஓவர்களை வீசிப் பாரேன்!" என்று ஹெட்டைப் பார்த்து சைகை காட்டினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் துரதிர்ஷ்டவசமாக விராட் கோலி 11 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து சாகிப் உசேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    கோலி அவுட்டாகி வெளியேறும்போது ஹெட், நான் பந்துவீச வருவதற்கு முன்பே நீ அவுட்டாகிட்டியே.. என்று வம்புக்கு இழுத்தார். இது இரு அணிகளின் ரசிகர்கள் மத்தியிலும் ரசிக்கப்பட்டது. போட்டி முடிவடைந்ததும் இரு அணி வீரர்களும் வழக்கமாக ஒருவருக்குக் கொருவர் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். அப்போது டிராவிஸ் ஹெட் தனது கையை நீட்டியபடி விராட் கோலியை நோக்கி வந்தார்.

    Advertisement

    ஆனால் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்த விராட் கோலி, ஹெட்டைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. அவர் நீட்டிய கையை முற்றிலும் புறக்கணித்து, அவருக்குப் பின்னால் நின்றிருந்த பேட் கம்மின்ஸ் மற்றும் பிற வீரர்களுக்குக் கைகுலுக்கிவிட்டு நேராக நகர்ந்தார். கையை நீட்டிய ஹெட், கோலி தன்னைத் தாண்டிச் சென்றதும் வேறு வழியின்றி அமைதியாக கடந்து சென்றார். இது விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    English Summary

    Virat Kohli: Virat Kohli Refuses to Shake Hands With Travis Head After Heated On-Field Exchange video is trending in Social media