ஒரே ஒரு வெற்றி.. ரூ.280 கோடியை வாரி சுருட்டிய இங்கிலாந்து! 3வது இடத்திற்கே பெரிய பரிசு தொகை தான்!

  • சென்னை: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த 3வது இடத்திற்கான போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி, பிரான்ஸை வீழ்த்தி 3வது இடத்தை பெற்றது. இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு கிடைத்த பரிசுத்தொகை குறித்த விவரங்களை நாம் பார்க்கலாம்.

    Advertisement

    உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, கனடா நாடுகளில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இந்த தொடர் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில், அர்ஜெண்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

    Advertisement

    3வது இடத்திற்கான போட்டி

    அதன்படி நேற்றைய தினம் மூன்றாவது இடத்திற்கான போட்டி நடந்தது. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்தது. தொடக்கம் முதலில் இதில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றிலேயே மூன்றாவது இடத்திற்கான போட்டியில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட கேம் இதுவாகும்

    இங்கிலாந்து ஆதிக்கம்

    இதில் முதல் பாதியில் முழுக்க முழுக்க இங்கிலாந்து அணியின் கை தான் ஓங்கி இருந்தது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே டெக்லான் ரைஸ் இங்கிலாந்துக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்திய நிலையில், முதல் பாதியில் 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி பதிலடி கொடுத்தது.

    Advertisement

    பரிசு தொகை

    இருப்பினும், போட்டியை மாற்றும் அளவுக்கு பிரான்ஸ் அணியால் பதிலடி தர முடியவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3வது இடத்தைப் பிடித்துள்ள இங்கிலாந்து அணிக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது சுமார் ரூ.280 கோடி) பரிசுத் தொகையை வென்றுள்ளது. அதேபோல் 4வது இடத்தில் நிறைவு செய்யும் அணிக்கு 27 மில்லியன் டாலர் (சுமார் ரூ.260 கோடி) வழங்கப்படும்.

    இன்று இரவு இறுதி போட்டி நடைபெறுகிறது. அதில் அர்ஜெண்டினா அணி, ஸ்பெயினை எதிர்கொள்கிறது. சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு போட்டியாக அது மாறியுள்ளது. இதில் சாம்பியன் பட்டம் வெல்ல போகும் அணிக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக கிடைக்கும். இறுதி போட்டியில் தோற்கும் அணிக்கு 33 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இறுதி போட்டி

    நள்ளிரவில் நடக்கும் இறுதி போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்திய நேரப்படி, இறுதிப் போட்டி நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்குகிறது. இறுதி போட்டியின் மீது எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ள நிலையில், போட்டியை ஜீ5 தளத்தில் நேரடியாக பார்க்கலாம்! அதேபோல ஜியோ பைபர் வாடிக்கையாளர்களும் ஜியோ டிவி செயலி மூலமாகவும் டிவியில் இறுதி போட்டியை பார்க்கலாம்!

    English Summary

    England defeated France 6-4 in the FIFA World Cup 2026 third-place playoff to secure third position(பிபா உலக கோப்பை கால்பந்து செய்திகள்): FIFA World Cup latest news in tamil.