37 போட்டிகள்.. தோல்வியே சந்திக்காத ஸ்பெயின் அணி.. அர்ஜென்டினாவின் ரெக்கார்ட் க்ளோஸ்!

  • அட்லாண்டா: சர்வதேச கால்பந்து வரலாற்றில் ஸ்பெயின் அணி 37 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடையாததன் மூலமாக அர்ஜென்டினா அணியின் சாதனையை முறியடித்துள்ளது. இதன் மூலமாக இத்தாலி அணியின் ஆல் டைம் சாதனையை சமன் செய்துள்ள ஸ்பெயின் அணி, உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வென்றால் அந்த சாதனையையும் அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது. அதேபோல் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை பெற்றது.

    Advertisement

    இதனால் ஜூலை 19ஆம் தேதி நடக்கவுள்ள ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - அர்ஜென்டினா அணிகள் மோத உள்ளன. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஸ்பெயின் அணி தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளை முறியடித்து வந்துள்ளது. 2019 முதல் 2022 வரை அர்ஜென்டினா அணி 36 சர்வதேச போட்டிகளில் தோல்வி

    இந்த சாதனையை ஸ்பெயின் அணி முறியடித்துயுள்ளது. ஸ்பெயின் அணி கடைசியாக 2024, மார்ச் மாதத்தில் கொல்பியா அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. இதன்பின் நடந்த 37 போட்டிகளில் ஸ்பெயின் அணி 28 வெற்றி, 9 டிராவுடன் அசத்தி வருகிறது. இதன் மூலமாக 37 போட்டிகளில் ஸ்பெயின் அணி தோல்வியை சந்திக்காமல் வேட்டையாடி வருகிறது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் 2018 - 2021 வரை இத்தாலி அணி 37 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்ததே இதுவரை ஆல்டைம் ரெக்கார்டாக உள்ளது. அதனையும் ஸ்பெயின் அணி சமன் செய்துள்ளது. இந்த நிலையில் ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தினால், ஸ்பெயின் அணி புதிய வரலாறு படைக்கும்.

    உலகக்கோப்பையை வெல்வதோடு மட்டுமல்லாமல், 38 போட்டிகளில் தோல்வி அடையாத முதல் அணி என்ற புதிய வரலாற்று சாதனையை ஸ்பெயின் அணி உருவாக்கும். ஸ்பெயின் அணியின் தடுப்பாட்டம் உச்சத்தில் இருப்பதால், அர்ஜென்டினா அணி கோல் அடிக்க மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    fifa world cup: Spain Breaks Argentina's Unbeaten Streak, Equals Italy's World Record After Reaching World Cup Final