களம் புகுந்த 2வது நிமிடம்.. ஸ்பெயின் வீரர் மெரினோவின் தரமான செய்கை.. தலைவிதியே மாறிப்போச்சு!

  • லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபிஃபா உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு பலம் வாய்ந்த ஸ்பெயின் அணி முன்னேறி இருக்கிறது. காலிறுதி சுற்றில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாதனை படைத்தது. கடைசி 4 நிமிடத்தில் சூப்பர் சப்-பாக களமிறங்கிய மெரினோ, 88வது நிமிடத்தில் ஒரு அட்டகாசமான கோலை அடித்து ஸ்பெயின் அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.

    Advertisement

    ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுப் போட்டிகள் உச்சக்கட்ட விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிகளான ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதல் 30 நிமிடங்கள் ஸ்பெயின் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தியது என்றே சொல்லலாம்.

    Advertisement

    இதன் பலனாக ஸ்பெயின் அணியின் பேபியன் ரூயிஸ் ஸ்பெயின் அணிக்காக 1-0 என்ற கணக்கில் முதல் கோலை அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஸ்பெயின் அணியின் இந்த கோல், பெல்ஜியம் அணியை கண் விழிக்க வைத்துவிட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்த உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி 650 நிமிடங்கள் ஒரு கோல் அடிக்க விட்டுக் கொடுக்கவில்லை.

    அந்த அளவிற்கு ஸ்பெயின் அணியின் டிஃபென்ஸ் பலமாக உள்ளது. ஆனால் இந்த டிஃபென்ஸ் பெல்ஜியம் அணி 41வது நிமிடத்தில் உடைத்தது. கெவின் டி ப்ரூய்ன் கொடுத்த தரமான பாஸை, சார்லஸ் டி கெட்டேலெஅர் ஹெட்டர் மூலம் கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் முடிவடைந்தது. பெல்ஜியம் அணி கோல் அடித்ததை ஸ்பெயின் கோல்கீப்பரால் நம்பவே முடியவில்லை.

    Advertisement

    இதன்பின் தொடங்கிய 2ஆம் பாதி ஆட்டத்தில் பொறி பறந்தது என்றே சொல்லலாம். இரு அணி வீரர்களும் ஒவ்வொர் 5 நிமிடத்திற்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி கொண்டே இருந்தனர். ஆனாலும் அதனை கடைசி நிமிடத்தில் எதிரணி வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இப்படியான சூழலில் பெல்ஜியம் கோல்கீப்பர் டிபெத் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார்.

    ஒரு கட்டத்தில் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டை நோக்கி நகர்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது ஸ்பெயின் அணி 2 வீரர்களை சூப்பர் சப்பாக மாற்றியது. கெவின் டி ப்ரூய்ன் மற்றும் டேனி ஓல்மோ ஆகியோரை மாற்றிவிட்டு அலெக்ஸில் மற்றும் மைக்கெல் மெரினோவை களமிறக்கியது. 86வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி செய்த மாற்றம், இந்தப் போட்டியின் தலைவிதியையே மாற்றியது என்று சொல்லலாம்.

    Advertisement

    ஏனென்றால் களம் புகுந்த 2 நிமிடங்களில் மைக்கெல் மெரினோ ஸ்பெயின் அணிக்கான 2வது கோலை அடித்தார். இதன் மூலமாக ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் அணி வலிமை வாய்ந்த பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

    English Summary

    Fifa world cup: Spain Reaches World Cup Semi-Finals as Mikel Merino Delivers Late Winner Over Belgium in the Fifa world cup