2024ல் இருந்து.. 37 போட்டியில் 1ல் கூட தோற்காத ஸ்பெயின்.. அரணாக நிற்கும் பயிற்சியாளர் லூயிஸ்!

  • டெக்ஸாஸ்: 2024 மார்ச் முதல் இதுவரை ஆடியுள்ள 37 போட்டிகளில் ஸ்பெயின் அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. நேஷன்ஸ் லீக், யூரோ கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர் என்று தொடர்ந்து வெற்றிக்கு மேல் வெற்றியை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவென்டே அமைந்துள்ளார்.

    Advertisement

    ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி உலகக்கோப்பை தொடரில் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது என்றே சொல்லலாம். பிரான்ஸ் அணியின் திட்டங்கள் எதுவுமே மைதானத்தில் செயல்படவில்லை.

    Advertisement

    அதன் விரக்தியில் தான் எம்பாப்பே போன்ற நட்சத்திர வீரரும் கூட தவறு செய்து மஞ்சள் அட்டை பெற்றார். இதற்கு ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவெண்டே முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக லூயிஸ் டி லா வந்த பின், முக்கிய தொடர்களில் ஸ்பெயின் இன்னும் வீழ்த்தப்படவில்லை.

    கடைசியாக 2024 ஒலிம்பிக் தொடரில் நடந்த நட்பு ரீதியிலான ஆட்டத்தில் கொலம்பியா அணியிடம் ஸ்பெயின் தோல்வி அடைந்தது. அதன்பின் ஸ்பெயின் அணி ஆடிய நேஷன்ஸ் லீக், யூரோ கோப்பை மற்றும் உலகக்கோப்பை என்று மொத்தமாக 37 போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வி அடையவில்லை. கிட்டத்தட்ட வெற்றி பெறுவதற்கான வெறியுடன் ஸ்பெயின் அணி ஒவ்வொரு போட்டியில் ஆடி வருகிறது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் யூரோ கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக 8 நாக் அவுட் போட்டிகளில் வென்ற ஒரே ஐரோக்கிய அணி என்ற சாதனையை ஸ்பெயின் அணி படைத்துள்ளது. இதன் காரணமாகவே 2010ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

    அதற்கேற்ப வீரர்களும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல.. இந்த உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே எதிரணியை கோல் அடிக்க விட்டிருக்கிறது. காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியால் மட்டுமே ஒரு கோல் அடிக்க முடிந்தது. அந்த அளவிற்கு டிஃபென்ஸில் வலிமையாக இருப்பதால், இம்முற ஸ்பெயின் கோப்பையை வெல்லும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    fifa world cup: Spain Remain Unbeaten at Major Tournaments Under Mastermind Luis de la Fuente