ஸ்பெயின் வீரர்களின் வேகம்.. கொஞ்சம் கூட ஈடுகொடுக்க முடியாத அர்ஜென்டினா.. தோல்விக்கு முதல் காரணம்!

  • நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணியின் வேகத்திற்கு கொஞ்சம் கூட அர்ஜென்டினா அணியால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக அர்ஜென்டினா வீரர்களால் பந்தை தக்க வைக்க முடியவில்லை.

    Advertisement

    ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது. இதன் மூலமாக 2010க்கு பின் 2வது முறையாக உலகக்கோப்பையை வென்று ஸ்பெயின் அணி சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வென்றது என்றே சொல்லலாம். இதனால் அர்ஜென்டினா அணி ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளது.

    Advertisement

    ஸ்பெயின் அணி வீரர்களின் வேகத்திற்கு கொஞ்சம் கூட அர்ஜென்டினா அணி வீரர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. மிட் ஃபீல்டில் அர்ஜென்டினா அணி காட்டிய உத்வேகம் 120 நிமிடங்களும் ஆச்சரியம் அடைய வைத்தது. அர்ஜென்டினா அணியின் இளம் வீரர்களால் கூட ஸ்பெயின் வீரர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஸ்பெயின் வீரர்களிடம் டிரிபிள் செய்து பந்தை கொண்டு செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டது.

    அதேபோல் அர்ஜென்டினா வீரர்களின் ஒவ்வொரு பாஸ்ஸையும் ஸ்பெயின் அணி முறியடித்தது என்றே சொல்லலாம். எந்த அர்ஜென்டினா வீரரிடம் பந்து சென்றாலும், உடனடியாக அவரை சுற்றி வளைத்து ஸ்பெயின் வீரர்கள் பந்தை பறிக்காமல் விலகுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் ஸ்பெயின் அணி பாக்ஸ் பக்கமே அர்ஜென்டினா அணியால் பந்தை கொண்டு வர முடியவில்லை.

    Advertisement

    அதற்கு ஸ்பெயின் அணியின் லைன் அப்பும் ஒரு காரணம். 4-1-2-3 என்ற லைன் அப்பை ஸ்பெயின் அணி அமைத்திருந்தது. இதனால் அர்ஜென்டினா அணியின் 4-4-2 என்ற லைன் அப்பை எளிதாக முறியடிக்க முடிந்தது. 4-1-2-3 என்ற லைன் அப்பின் மூலமாக ஸ்பெயின் அணி ஒரு அராஜகத்தை நிகழ்த்தியது என்றே சொல்லலாம்.

    ஸ்பெயின் அணி பந்தை தங்களின் கால்களில் தக்க வைக்க முதல் சில நிமிடங்களில் மட்டுமே போராடியது. ஒரு கட்டத்தில் ஸ்பெயின் அணியின் பாஸ்களை தடுக்க கூட அர்ஜென்டினா வீரர்களால் முடியவில்லை. முதல்முறையாக பயிற்சியாளர் ஸ்கலோனியின் திட்டத்தை எதிரணி மொத்தமாக தவிடுபொடியாக்கி இருக்கிறது என்றே சொல்லலாம். இதனால் தோல்வியை ஏற்க முடியாமல் அர்ஜென்டினா ரசிகர்கள் கண்ணீர்விட்டு அழத் தொடங்கினர்.

    English Summary

    Lionel Messi: Argentina Outpaced by the Spain's Breakneck Speed and Secures 1-0 FIFA World Cup Final Victory