அர்ஜென்டினா vs ஸ்பெயின்.. இந்திய நேரப்படி போட்டி எப்போது தொடங்கும்? எந்த சேனல், ஓடிடியில் காணலாம்?

  • நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி களமிறங்க உள்ளது. இந்தப் போட்டி எத்தனை மணிக்கு தொடங்குகிறது? இந்தியாவில் எந்த சேனல் மற்றும் ஓடிடியில் பார்க்க முடியும்? என்பதை விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஸ்பெயின் அணியை எதிர்த்து களமிறங்கும் அர்ஜென்டினா அணி கோப்பையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 39 வயதில் லியோனல் மெஸ்ஸி உலகக்கோப்பையை வெல்வாரா என்று அவரது ரசிகர்கள் கேள்வியுடன் இருக்கின்றனர்.

    Advertisement

    ஸ்பெயின் அணியின் தடுப்பாட்டத்தை அர்ஜென்டினா அணியால் சமாளிக்க முடியுமா? மெஸ்ஸி போன்ற ஒரு ஜாம்பவான் வீரரை ஸ்பெயின் அணியால் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதேபோல் ஸ்பெயின் அணியில் மட்டும் 8 பார்சிலோனா வீரர்கள் ஆடுகின்றனர். மறுபுறம் மெஸ்ஸி இருப்பதால், இந்த ஆட்டம் பார்சிலோனா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

    அதுமட்டுமல்லாமல் ஸ்பெயின் அணியின் லமின் யமால் மற்றும் மெஸ்ஸி இடையிலான மோதலை காணவும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். ஃபிஃபா உலகக்கோப்பை தொடரை யார் கைப்பற்றுவார் என்ற கணிப்புகளும் பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்க உள்ளது.

    Advertisement

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெட் லைஃப் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. இந்தியாவில் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியை ஜீ5 ஓடிடியில் கட்டணம் கட்டி பார்க்க முடியும். இதற்கான கட்டணமாக ரூ.399 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தொலைக்காட்சியை பொறுத்தவரை யுனைட்8 ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்க முடியும்.

    இதனை கேபிள் ஆபரேட்டர்கள் சப்ஸ்க்ரைப் செய்திருக்க வேண்டும். அதேபோல் தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் சேனலில் இலவசமாக பார்க்க முடியும். இறுதிப் போட்டி மட்டும் இதில் ஒளிபரப்பப்பட உள்ளது. இதனால் இந்தியாவில் இன்று பெரும்பாலான இளைஞர்கள் தூங்காமல் இந்தப் போட்டியை பார்ப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Lionel Messi: When and Where to Watch the FIFA World Cup Finals between Argentina and Spain in India