8 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த நாட்டாமை.. இறந்தவர் உடலை எரிக்க ரூ.2 லட்சம் அபராதம்!

  • தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை கிராமத்தில் 8 பேரின் குடும்பத்தை ஊர் நாட்டாமை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதோடு, இறந்த முதியவரின் உடலை பொது தகன மேடையில் தகனம் செய்ய விடாமல் தடுத்து ரூ.2 லட்சம் அபராதம் வசூலித்த பிறகு இறுதி சடங்கிற்கு அனுமதி வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரை அந்த ஊர் நாட்டாமை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தகராறு ஒன்றில் நாட்டாமை சொன்னதை விக்னேஷ் ஏற்க மறுத்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    Advertisement

    விக்னேஷ் உடன் மற்ற பொதுமக்கள் பேசக்கூடாது. அவரது வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை மீறி பேசியதாக மேலும் 7 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.

    அதில் கேவி ராமராஜ் (வயது 85) என்பவரின் குடும்பமும் ஒன்று. இவரது மகன் பெயர் செந்தில் வேல். இவர்கள் விக்னேஷ் உடன் பேசியதாக கூறி கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தான் வயது முதிர்வு காரணமாக உடல்நல பிரச்சனையில் கேவி ராமராஜ் கடந்த 21ம் தேதி இறந்தார்.

    இதையடுத்து அவரது உடலை அவர் சார்ந்த சமுதாயத்தினருக்கான பொது தகன மேடையில் வைத்து தகனம் செய்ய மகன் செந்தில்வேல் முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்தது. நிலையில் அதனை சிலர் தடுத்தனர். ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் கேவி ராமராஜ் உடலை அங்கு தகனம் செய்ய முடியாது என்று கூறினர்.

    Advertisement

    அதுமட்டுமின்றி அவரது உடலை தகனம் செய்ய வேண்டும் என்றால் ஊர் கட்டுப்பாட்டை மீறியதற்காக ரூ.2.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து கேவி ராம்ராஜ் குடும்பத்தினர் ரூ.2.1 லட்சம் அபராதம் செலுத்தி அவரது உடலை தகனம் செய்தனர்.

    அபராதம் செலுத்த ஊரை விட்டு முதல் முதலில் ஒதுக்கி வைக்கப்பட்ட விக்னேஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரை இறுதி சடங்கில் பங்கேற்க ஊர் நாட்டாமை அனுமதிக்கவில்லை. இறந்த கேவி ராம்ராஜ், விக்னேஷ்க்கு தாத்தா உறவு முறை என்றாலும் அவர் அனுமதிக்கப்படவில்லை.

    இதுபற்றி விக்னேஷ் கூறுகையில், ''நான் இறுதி சடங்கில் பங்கேற்றால் செந்தில் வேல் குடும்பத்தினர் இன்னும் சில பிரச்சனைகளை எதிர்கொள்வார். இதனால் நான் பங்கேற்கவில்லை. ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 8 குடும்பத்தில் தற்போது வரை 2 குடும்பத்தினர் அபராதம் செலுத்தி உள்ளனர்.

    Advertisement

    ஊர் பஞ்சாயத்தின்போது யாரும் போட்டோ, வீடியோக்கள் எடுத்து விடுவார்கள் என்பதால் செல்போனை பறித்து வைத்து கொள்வதோடு, உளவுத்துறை போலீசாரையும் அங்கிருந்து வெளியேற்றி விடுவார்கள்'' என கூறியுள்ளார்.

    இந்நிலையில் தான் மாவட்ட எஸ்பி அசேக் குமார் மற்றும் கலெக்டர் ரஞ்சித் சிங் ஆகியோர் இநத விவகாரத்தில் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது. சாம்பவர் வடகரையில் ஊர் நாட்டாமை கட்டப்பஞ்சாயத்து செய்து குடும்பங்களை ஒதுக்கி வைத்தது கடந்த 2025 பிப்ரவரி மாதத்திலேயே சர்ச்சையை கிளப்பியது.

    அப்போது அந்த பிரச்சனையை சரிசெய்வதாக அதிகாரிகள் கூறிய நிலையில் அதன்பிறகு மறந்து போயினர். இதனால் சாம்பவர் வடகரையில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நாட்டமைகளுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    --------

    English Summary

    In SambavarVadakarai village, Tenkasi district, the village Nattamail ostracized a family of eight. Furthermore, he prevented the cremation of a deceased elderly man's body at the communal cremation ground and only granted permission for the funeral rites after a fine of Rs. 2 lakh was collected.