தவெக அரசு பதவியேற்று 9 நாட்கள் ஆகியும், அமைச்சர்கள் இல்லாமல் காலியாக உள்ள துறைகள்

  • சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் மே 10ம் தேதி பதவியேற்றது. முதல்வர் பதவியேற்று 9 நாட்கள் ஆகவிட்ட பின்னரும் வேளாண் துறை, வருவாய் துறை, போக்குவரத்து துறை உள்பட 20 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. ஒரு சில துறைகளுக்ககே அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல துறைகள் அமைச்சர்கள் இல்லாத காரணத்தால் சிக்கல் நீடிக்கிறது.

    Advertisement

    குறிப்பாக வேளாண்துறை உயர்கல்வித்துறை, போக்குவரத்து, வணிகவரி மற்றும் சமூக நலத்துறை, பால்வளத்துறை என்பது அமைச்சரின் நேரடி கண்காணிப்புதேவைப்படும் துறைகள் ஆகும். ஆனால் இன்று வரை அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.. அதேபோல் தமிழகத்தின் வருவாயில் முதன்மை பங்கு வகிக்கும் வணிகவரி மற்றும் பதிவுத்துறைக்கும் அமைச்சர் நியமிக்கப்படவில்லை. வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட்டே திமுக அரசு போட்டு வந்தது. ஆனால் தவெக அரசு இதுவரை வேளாண்மை அமைச்சர் நியமிக்கப்படவில்லை. விரைவில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்துடன் பட்ஜெட் குறித்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த வேண்டும். அந்த துறைக்கு அமைச்சர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.

    Advertisement

    பல்வேறு அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும். அதற்கு அமைச்சர்களின் ஒப்புதல் அமைத்த அவசியம் ஆகும். அமைச்சர்கள் இல்லாததால் பல துறைகளில் கோப்புக்கள் தேங்கியுள்ளது. இன்னும் சில நாளில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இல்லாவிட்டால் தலைமை செயலகத்தில் கோப்புகள் தேங்கி முடங்கும் அபாயம் இருக்கிறதாம். ஏனெனில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு பணிகளுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை.. புதிய அரசு தான் நிதியை விடுவிக்க வேண்டும்.

    அமைச்சர்கள் இல்லாமல் காலியாக உள்ள துறைகள்

    1 உயர்கல்வித் துறை

    2 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

    3 போக்குவரத்துத் துறை

    4 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

    5 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

    6 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

    7 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்

    8 சமூக நலத்துறை

    9 சுற்றுலாத் துறை

    10 வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை

    11 சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

    12 தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை

    Advertisement

    13 இந்து சமய அறநிலையத் துறை

    14 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

    15 வனத்துறை

    16 மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை

    17 கைத்தறி மற்றும் துணிநூல் துறை

    18 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை

    19 பால்வளம் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை

    20 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

    English Summary

    A government led by Tamilaga Vettri Kazhagam President Vijay assumed office in Tamil Nadu on May 10th. Even nine days after the Chief Minister took the oath of office, ministers have yet to be appointed for 20 departments, including Agriculture, Revenue, and Transport.