சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகப் போராடும் 9 வயது சிறுவன் சாய்


சென்னை: "சாய் பிரகாஷ் மிகவும் துறுதுறுவென்று இருக்கும் ஒரு குழந்தை. அவன் இருக்கும் இடத்தில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். அவனுடைய குழந்தை சிரிப்பும் மழலைப் பேச்சும் அனைவரையும் வசீகரிக்கும்" என்று கூறினார் அவனுடைய தாய் துர்காதேவி. எங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை ஒரே விநாடியில் சிதைந்து போனது. என் 4 வயது மகன் சாய்க்கு திடீரென்று கடுமையான வலிப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு விரைந்தோம். அவன் கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.

அன்று முதல் சாயின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வருவதும் மருந்துகள் வாங்கித் தருவதும் வாடிக்கையாகி விட்டது. "தொடக்கத்தில் ஊசியைப் பார்த்தாலே அலறி ஓடுவான். ஆனால் அந்த வலி இப்போது அவனுக்கு பழகிவிட்டது. தற்போதெல்லாம் ஊசி போடும்போது அவன் எந்த ஒரு ஓசையையும் எழுப்புவதேயில்லை. இதனைக் காணும்போது நெஞ்சு வெடிக்கிறது" என்று அவன் தாய் கதறுகிறார்.

ஒரு நாள் சாய் பள்ளியிலிருந்து மற்ற நாட்களை விட சீக்கிரமாக வீடு வந்து சேர்ந்தான். வரும்போதே தனக்கு அதீத நெஞ்சு வலி இருப்பதாகவும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தான். அவன் மிகவும் சோர்வாக இருந்தான். அவனுடைய கால்கள் வீங்கி இருந்தன. அப்போது நாங்கள் உடனே மருத்துவமனைக்கு சென்றோம். மருத்துவர்கள் அவனுடைய சிறுநீரகம் முற்றிலும் பழுதடைந்து விட்டதாக தெரிவித்தனர்.

மாற்று சிறுநீரகம் பொருத்துவதே ஒரே தீர்வு என்று மருத்துவர்கள் கூறினார். இந்த அறுவை சிகிச்சைக்கு 15 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த தொகை எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுக்கிறது என்று சாயின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். சாயின் தாய் வீட்டை நிர்வகிக்கிறார். தந்தை உள்ளூரில் கேபிள் ஆப்பரேட்டராக மாதம் சுமார் 10,000/- சம்பாதித்து வருகிறார். "எங்களிடம் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் எங்கள் மகனை மருத்துவமனையில் வைத்திருந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. தற்போது வரை அவனுக்கான சிகிச்சைக்காக நாங்கள் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளோம்." என்று கூறினர் சாயினுடைய பெற்றோர்.

படுத்த படுக்கையாக இருந்தாலும், அந்த 9 வயது சிறுவன் தன்னால் முடித்தவரை தன் பெற்றோருக்கு உதவி வருகிறான். "தாய் மற்றும் தந்தையாகிய நாங்கள் இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது தம்பியை எங்கள் இடத்தில் இருந்து அவன் பார்த்துக் கொள்கிறான். நோய்வாய்ப்பட்ட மகன், எனக்காக உதவுவதைப் பார்க்கும்போது மிகவும் மன வேதனை அடைகிறேன். ஆனால் எங்களுக்கு வேறு ஒரு வழியும் இல்லை " என்று அவன் தாய் கூறினார்.

சாய் மிகவும் சிறியவனாக இருப்பதால் அவனுடைய உடல்நலத்தின் தீவிரத்தைப் பற்றி அவனிடம் எங்களால் விவரிக்க முடியவில்லை. அவனுடைய தேர்வுக்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருப்பதாக அவன் பெற்றோரிடம் கூறிக் கொண்டிருக்கிறான். "அவனுக்கு பள்ளிக்குச் செல்வது மிகவும் விருப்பம். அவனுடைய தேர்வு நாளன்று பள்ளி செல்ல முடியாததைப் பற்றி அதிக கவலை கொள்கிறான். அவனுடைய உடல்நலம் எல்லாவற்றையும் விட முக்கியம் என்பது அவனுக்கு புரியவில்லை."

சாயின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அவன் பெற்றோர் 15 லட்சம் ரூபாய்கான நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளனர்.

மனிதநேயத்துடன் நாம் அனைவரும் கைகோர்த்து இந்த சேவையை வெற்றி அடையச் செய்வோம். உங்களிடம் இருந்து கிடைக்கும் சிறிய தொகையும் சாயின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மத்தியில் பகிர்வதால் மற்றும் உங்களால் இயன்ற பண உதவி செய்வதால் அந்த சிறுவனுக்கு உங்களால் உதவ முடியும். உங்களிடம் இருந்து வரும் எந்த ஒரு நன்கொடையும் சாயின் பெற்றோருக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

Read more about: உதவி

Have a great day!
Read more...

English Summary

Raising Rs.15 lakhs for 9-Year-Old Sai transplant is our last hope of saving him. Please donate as much as you can! Sai has very little time left, and you are our last hope. You can also help me by sharing this story with your friends and family, or anyone else who might be able to help!