விழுப்புரம் அருகே தீயில் கருகி தாய், 3 குழந்தைகள் பலி.. குடும்பத்தகராறில் தற்கொலையா என விசாரணை


விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே தீயில் கருகி தாய் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேலகொண்டூரில் வசித்து வந்தவர் தனலெட்சுமி. இவருக்கு 9 மாத குழந்தை ருத்ரன், 7 வயதில் கமலேஸ்வரன், 4 வயதில் விஷ்ணுப்ரியன் ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில் தனலெட்சுமியின் வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் தனலெட்சுமி மற்றும் அவரது 3 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடும்பத்தகராறில் தனலெட்சுமி 3 குழந்தைகள் உடன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமான என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

A mother dead with her 3 children after burnt house in Vilupuram. Police inquires its accident or sucide.