அப்படியே நம்பும் மக்கள்.. ரஜினி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளிய வதந்தி

  • சென்னை: வதந்திகளை உண்மை என்று மக்கள் நம்பும் அளவிற்கு இங்கே காலம் மாறி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்து அண்மை காலத்தில் பரவிய வதந்தி மிக சாதாரணமாக கடந்து போகக்கூடியது அல்ல. கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோற்றுப்போன நிலையில், அவரை போய் நேரில் சந்தித்து ரஜினி ஆறுதல் கூறினார். ஆனால் விஜய் முதல்வராவது ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று வதந்தி பரவியது . விஜய்யுடன் ரஜினியை ஒப்பிட்டு சில வதந்திகளை பரப்பினார்கள். இதனால் தான் ரஜினியே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கும் நிலை வந்துள்ளது.

    Advertisement

    தமிழக வெற்றிக்கழகத்தை ஆரம்பித்த விஜய் வெறும் இரண்டு ஆண்டுகளில் முதல்வராகி உள்ளார். ஆனால் 1996ல் இருந்து 2021, 2006, 2016, 2021 என தொடர்ந்து ஐந்து சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் , 2017ம் ஆண்டுக்கு பிறகே அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.அதற்கான பணிகளையும்முன்னெடுத்தார். ஆனால் திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா வந்தது. அந்த காலக்கட்டத்தில் தனக்கு அரசியல் வேண்டாம். அது சரியாக வராது என்று அறிவித்து ஒதுங்கி கொண்டார். இதையடுத்து 2021 தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானார். திமுக தலைவர் ஸ்டாலின் உடன் நெருங்கிய நட்பும் ரஜினிக்கு இருந்தது.

    Advertisement

    2026 தேர்தலில் 108 இடங்களில் விஜய் மிகப்பெரிய வெற்றி பெற்றார். தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார். விஜய்யை அதிமுகவின் ஒரு பிரிவினர் ஆதரித்துள்ளனர். இதுதான் அரசியல் எதார்த்தம். இதில் ரஜினியை ஏன் சம்பந்தப்படுத்தி விமர்சிக்கிறார்கள் என்றால், ஸ்டாலினை போய் ரஜினி பார்த்தது தான். ஸ்டாலினை போய் ரஜினி பார்த்த போது, திமுக அதிமுக கூட்டணி குறித்தும் பேசப்பட்டது. ரஜினிக்கு விஜய் முதல்வராவது பிடிக்கவில்லை.. எப்படியாவது இதனை தடுக்க பார்க்கிறார் என்று சிலர் வதந்திகளை பரப்பினார்கள்.

    Advertisement

    விஜய் ரசிகர்களை காக்கா கழுகு என ஏற்கனவே ரஜினி மறைமுகமாக விமர்சித்த காரணத்தாலும், பட்டத்தை பறிக்க முயற்சிப்பதாக பாட்டும் ரஜினி தனது படத்தில் வைத்த காரணத்தாலும் வாய்க்கால் தகராறு போல் பிரச்சனை ஓடிக்கொண்டிருந்தது . இப்படியான நிலையில் ரஜினி, ஸ்டாலினை சந்தித்தபோது, ரஜினியை பற்றி பல்வேறு வதந்திகள் பரவியது. அதிமுக, திமுக ஆதரவுடன் ரஜினி முதல்வராக திட்டமிடுவதாக கூட வதந்திகள் பரவின. ஒரு கட்டத்தில் விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து, மக்களுமே அரசியல் நையாண்டி மீம்களை பதிவிட்டு ரஜினியை கிண்டல் செய்ய தொடங்கினார்கள். கிட்டத்தட்ட உண்மை தானோ என்று மக்கள் நம்பும் அளவிற்கு வதந்தி எல்லை மீறி இருந்தது.

    Advertisement

    இந்த சூழலில் தான் ரஜினியே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கும் நிலை உருவானது. நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் நேற்று பேசும் போது,"நீங்கள் புதிதாகப் பகிர்ந்துள்ள இரண்டாவது படத்தின் (நடிகர் ரஜினிகாந்த் பேட்டி) தமிழ் உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

    சட்டமன்ற தேர்தல் முடிவு வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகின்றன. அதற்கு நான் விடை கொடுக்காவிட்டால் அதுவே உண்மையாகிவிடும்.

    தேர்தல் முடிவு வந்தவுடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நான் நேரில் சென்று சந்தித்தது விமர்சனமானது. மு.க.ஸ்டாலின் எனக்கு 40 ஆண்டு கால நண்பர். எங்களது நட்பானது கொள்கைகள் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டது.

    Advertisement

    ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜமாக இருந்தாலும் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தது சங்கடமாக இருந்தது. அதற்காக ஒரு நண்பன் என்ற முறையில் நட்பு அடிப்படையில் அவரை சென்று சந்தித்தேன். உடனே, 'விஜய் முதல்-அமைச்சராக கூடாது. அதை தடுக்கத்தான் ரஜினி, மு.க.ஸ்டாலினை சந்தித்தார். வேறு 2 பெரிய கட்சிகளை இணைக்கவும் திட்டமிடுகிறார்' என்றெல்லாம் பரப்பி விட்டார்கள்.

    அந்த சூழ்நிலையில் அப்படி எல்லாம் பேச முடியுமா? அப்படி பேசும் அளவுக்கு தரம் கெட்ட ஆள் நான் கிடையாது. அதை தற்போது தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.

    ஈரோடு டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா.. ஸ்பாட்டிற்கே வந்த தவெக எம்எல்ஏ.. அதிரடி ஆக்ஷன்
    அதன்பிறகு, விமான நிலையத்தில் விஜய் பற்றி கேட்ட கேள்விக்கு அவருக்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்றும் விமர்சிக்கிறார்கள். தேர்தலில் விஜய் வெற்றி பெற்ற உடனேயே எனது 'எக்ஸ்' தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

    Advertisement

    சமீபத்தில் பெங்களூரு செல்லும்போது, ஒரு செல்போனை வைத்துக்கொண்டு என்னிடம் ஒருவர் வந்தார். 'விஜய் முதல் அமைச்சராகிவிட்டாரே... என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரைப் பார்த்தால் பத்திரிகையாளர் மாதிரி தெரியவில்லை என்பதால், நான் சிரித்தபடியே கடந்து விட்டேன். உடனே விஜய்க்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று விமர்சிக்கிறார்கள்.

    விஜய் மீது எனக்கு பொறாமை என்றும் பேசுகிறார்கள். நான் அரசியலில் இல்லை. அரசியலில் இருந்து விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அரசியலில் நான் இல்லாதபோது, விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும்?. ஒருவேளை கமல்ஹாசன் முதல்-அமைச்சராக இருந்தால் கூட பொறாமைப்பட்டிருப்பேனோ என்று தெரியவில்லை. அப்போது கூட எனக்கு பொறாமை வந்திருக்காது. கிடைப்பது கிடைக்காமல் இருக்காது. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது.

    எனக்கும், விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வித்தியாசம் இருக்கிறது. நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன். என்னுடன் விஜய்யை ஒப்பிடுவதும், அவரை போட்டியாக நினைப்பதும் எனக்கு அழகல்ல. அதேபோல என்னை ஒப்பிட்டு பார்ப்பதும் அவருக்கு நல்லதல்ல. சிறிய வயதில் இருந்து அவரை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் முதல்-அமைச்சராவதில் எனக்கு என்ன பொறாமை?.

    அரசியலில் இந்த சிறியவயதில், அதாவது 52 வயதில் எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஆகியோரை விட பெரிய சாதனை படைத்திருக்கிறார். மத்தியில் பா.ஜனதா என்ற பெருங்கட்சி, மாநிலத்தில் இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து, தனி ஆளாக ஜெயித்திருக்கிறார்.

    சினிமாவில் இருந்து வந்த ஒரு நபர் அரசியலில் ஜெயித்திருப்பது எனக்கு பொறாமை இல்லை. ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான். சூப்பர். எனவே எனக்கு எந்த பொறாமையும் இல்லை. விஜய் மீது மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்து மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்" இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்கள்:

    கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வராதது உங்கள் ரசிகர்களிடம் இன்றளவும் ஒரு ஆதங்கம் இருக்கிறதே...

    பதில்:- நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை? என்று ஏற்கனவே ஒரு தெளிவான அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறேன். ஆதங்கம் இருக்கலாம். ஆனாலும் என் விளக்கம் அனைத்தும் தெரிந்த பிறகும் ஏன் அரசியலுக்கு வரவில்லை? என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    கேள்வி:- இனி உங்கள் ரசிகர்களை எப்படி கட்டமைக்க போகிறீர்கள்?

    பதில்:- விருப்பப்படும் கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுங்கள் என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். சினிமா வேறு, அரசியல் வேறு. சினிமாவில் உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட ஓய்வெடுத்து நடிக்கலாம் ஆனால் அரசியல் களம் வேறு. அது அவ்வளவு எளிது அல்ல.

    விஜய்யை சந்திப்பீர்களா?
    கேள்வி:- விஜய்யை கமல்ஹாசன் சந்தித்து திரையுலகம் சார்ந்த 6 கோரிக்கைகளை விடுத்துள்ளார். நீங்கள் விஜய்யை சந்திப்பீர்களா?

    பதில்:- திரையுலகில் இருந்து நடிகர் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் விஜய்யை பார்த்து பேசியுள்ளனர். கமலும் பார்த்துவிட்டு வந்துள்ளார். மறுபடியும் சும்மா சம்பிரதாயத்துக்கு சென்று அவரை பார்ப்பது எனக்கு பிடிக்காது.

    கேள்வி:- 60 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட கட்சிகள் இல்லாத ஒரு கட்சி தமிழகத்தை ஆள்கிறது. இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

    பதில்:- மக்கள் இத்தனை ஆண்டுகள் பார்த்துவிட்டார்கள். மாற்றம் தேவை என்று நினைத்தார்கள். அதன்படி விஜய் வந்திருக்கிறார். விஜய்க்கு 100 சதவீதம் சினிமா புகழ் கைகொடுத்திருக்கிறது. இளைஞர்கள், பெண்கள் தாண்டி சமூக வலைதளங்களும் கைகொடுத்துள்ளது.

    English Summary

    Times have changed to such an extent here that people now believe rumors to be the truth. The rumor that has recently circulated regarding actor Rajinikanth is not something that can be simply brushed aside.