உளுந்தூர்பேட்டையில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி! 5 பேர் காயம்!

  • உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சிவகாசியில் இருந்து சென்னை சென்ற மினி லாரி ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

    Advertisement

    சிவகாசியிலிருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று சென்னைக்குச் சென்றது. இந்த லாரியை சிவகாசி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார்.

    Advertisement

    இந்த மினி லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி தரிகட்டி ஓடி சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    லாரி திடீரென பிரேக் போட்டதால் விபரீதம்..அடுத்தடுத்து மோதிய 3 ஆம்னி பேருந்துகள்..உளுந்தூர்பேட்டை ஷாக்

    இந்த விபத்தில் மினி லாரி முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து இடிப்பாடுகளில் சிக்கினார். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்து ஈடுபாடுகளில் சிக்கிய ஐந்து பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    Advertisement

    தொடர்ந்து விபத்தில் சிக்கிய மினி லாரியை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதுடன் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    Ulundurpettai: A mini lorry plunges into 20 feet depth leaves 5 injured. Driver was in sleepy was the main reason for accident, sources says.