அடுத்த அபிராமி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து 34 வயது மூத்த கணவரை தீர்த்துக்கட்டிய ஜபரூன்னிசா!


கள்ளக்காதலனுடன் கூத்தடித்த மனைவி- வீடியோ

சென்னை: மாங்காடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: மாங்காடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

குன்றத்தூரை சேர்ந்த அபிராமி பிரியாணி கடைக்காரருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கடந்த 30 மற்றும் 31ஆம் தேதி கொலைவெறியாட்டம் நடத்தியதில் இரண்டு அப்பாவி குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் சென்னை மாங்காட்டில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

36 வயதான மனைவி

சென்னை மாங்காடு அடுத்த பட்டூர் காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் 70 வயதான சாகுல்ஹமீது. இவரது மனைவி ஜபருன்னிசா. இவருக்கு வயது 36. சாகுல்ஹமீதுக்கு ஜபருன்னிசா மூன்றாவது மனைவி என்று கூறப்படுகிறது. கணவன் தன்னை விட முப்பத்தி நான்கு வயது மூத்தவர் என்பதால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது.

கள்ளக்காதலனுடன் ஜாலி

இந்நிலையில் தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து போன தனது அக்காள் கணவர் உசேனுடன், ஜபருன்னிசாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சாகுல் ஹமீது இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரும் உசைனுடன் ஜபருன்னிசா குதூகலமாக இருந்துள்ளார். இந்த விஷயம் அக்கம்பக்கத்தினர் மூலமாக சாகுல்ஹமீதுக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

தீர்த்துக்கட்ட முடிவு

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி ஜபருன்னிசா, தனது கள்ளக்காதலன் உசேனிடம் இது குறித்து கூறியுள்ளார்.நமது உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும், தனது கணவன் சாகுல் ஹமீதை தீர்த்துக் கட்டினால் தான், நாம் சந்தோஷமாக வாழ முடியும் என்று முடிவு செய்த இருவரும், அவரின் வருகைக்காக ஞாயிற்றுக்கிழமை இரவு காத்திருந்தனர்.

அடித்துகொன்ற கள்ளக்காதலன்

இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சாகுல் ஹமீதை, மனைவி ஜபருன்னிசா திமிறாதபடி பிடித்துக்கொண்டார். அப்போது அவரது கள்ளக்காதலன் உசேன், சாகுல் ஹமீதை கம்பியால் பலமாக தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அடக்கம் செய்யும் பணி

அவர் இறந்ததை உறுதி செய்த இருவரும் பின்னர், வீட்டை வெளியில் பூட்டி விட்டு, சாகுல் ஹமீது உடலை தூக்கிக் கொண்டு, குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் உள்ள உசேன் வீட்டிற்கு கொண்டு போய் உடலை அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பிரேத பரிசோதனை

இதனிடையே உடலில் இருந்த காயத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,கொலை செய்யப்பட்டு இறந்த சாகுல் ஹமீது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒப்புக்கொண்ட கள்ளக்காதலர்கள்

ஜபருன்னிசா மற்றும் உசைனை கைது செய்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதலுக்காக சாகுல் ஹமீதை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Have a great day!
Read more...

English Summary

A wife kills husband with her illicit husband in Chennai Mangadu. Police has arrest both of them.