திமுக ஜெயித்தால் என் பதவியை ராஜினாமா செய்றேன்! தவெக வென்றால்..? உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்

  • செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவைவிட ஒரு வாக்கு கூடுதலாக வாங்கி காட்டினால் நான் எனது கட்சி பதவியை ராஜினாமா செய்கிறேன் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    Advertisement

    மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், தவெக சார்பில் மரகதம் குமரவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

    மதுராந்தகம்

    மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த தொகுதிக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அப்படியிருக்கும் பட்சத்தில் அண்மையில்தான் முதல்வர் விஜய், மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

    திமுக மீது விமர்சனம்

    அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அது போல் மதுராந்தகம் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அமைச்சர்கள் மரியவில்சன், ராஜ்மோகன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    Advertisement

    மரகதம் குமரவேல்

    நேற்றைய தினம் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் திமுகவை யாராலும் அழிக்க முடியாது என கனிமொழி கூறுவார். ஆனால் இப்போது ஒருவர் உள்ளார். திமுகவை அழிக்க வந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

    அறிஞர் அண்ணா

    1967 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, மக்கள் ஆட்சியை கொண்டு வந்தார். அதன் பிறகு கருணாநிதி குடும்ப ஆட்சியைக் கொண்டு வந்து பின்னர் மன்னர் ஆட்சியை கொண்டு வந்தார்.

    மன்னராட்சி நடந்தது

    ஸ்டாலினுக்கு தனது மகனை பெரிய மன்னனாக்க வேண்டும் என்ற கனவு உள்ளது. நல்ல மன்னன் போருக்கு சென்று மக்களை பாதுகாப்பார். இன்னும் சில மன்னர்கள் அந்தப்புரத்தில் மட்டுமே இருப்பார்கள்.

    Advertisement

    அந்தப்புரத்தில்

    தேர்தல் என்றால் என்ன? அது ஒரு யுத்தம், அந்த யுத்தத்திற்குள் திடீரென வந்த இளவரசருக்கு அந்தப்புரத்தில் கற்றுக் கொண்ட ஆபாசம்தான் வாயில் வரும். மன்னராட்சியை ஒழிப்பதற்கு ஒரு மக்கள் தலைவன் வந்துள்ளார். அதுதான் முதல்வர் விஜய்.

    திமுக ஜெயித்தால்

    இளவரசர் உதயநிதி எங்கள் தலைவர் அளவுக்கு பேச வேண்டாம். எங்களுக்கு முதலில் பதில் கூறுங்கள். மதுராந்தகம் தொகுதியில் திமுக ஜெயித்துவிட்டால் தவெக தேர்தல் பிரச்சார பொதுத் செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இதை உதயநிதிக்கு நான் வெளிப்படையாக சவால் விடுகிறேன்.

    இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரம் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு உங்கள் அப்பாவைக் கூட கூட்டிக் கொண்டு வாங்க? திமுக தோற்றுவிட்டால் கட்சிப் பதவியில் இருந்து விலக உதயநிதி தயாரா?

    Advertisement

    70 ஆண்டு கட்சி

    நாங்கள் எளிய வீட்டுப் பிள்ளைகள். நீங்கள் 70 ஆண்டு பழமையான கட்சி. மதுராந்தகத்தில் தவெகவை விட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கிக் காட்டுங்கள் என ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்.

    தமிழக சட்டசபையில் கூட்டத் தொடர் நன்றாக போகிறது. ஆனால் ஆதவ் அர்ஜுனா எழுந்து பேசினால் அன்று பூரா விவாதம்தான், சண்டைதான் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்திருந்தார்.

    English Summary

    Minister Aadhav Arjuna challenges Udhayanidhi that if DMK win in Maduranthagam, then he will resign his party post, if not will Udhayanidhi resign?