அமைச்சர் தங்கமணி காரில் லாரி மோதியது.. டிரைவர் காயம்.. கார் சேதம்.. தலைமைச் செயலகம் அருகே பரபரப்பு!


சென்னை: சென்னையில் அதிமுக அமைச்சர் தங்கமணி கார் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அமைச்சருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் முக்கிய கூட்டம் தற்போது நடக்கிறது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் பழனிச்சாமி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணியின் கார், தலைமை செயலகம் அருகே வந்த போது எதிரே வந்த தண்ணீர் லாரி கார் மீது மோதியுள்ளது. தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை மீறி வந்ததாக கூறப்பட்டுகிறது.

இதில் கார் மோசமாக சேதம் அடைந்துள்ளது. கார் ஓட்டுனருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் தங்கமணிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் அங்கு சில நிமிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சர் தங்கமணி வேறு ஒரு காரில் கூட்டத்திற்கு சென்றுள்ளார். லாரி ஓட்டுனரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Have a great day!
Read more...

English Summary

ADMK Minister Thangamani car gets an accident: He is safe and alright.