ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!

  • தென்காசி: ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில், ஐயப்பன் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன், போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் சுட்டுப் பிடித்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    தென்காசி மாவட்டம் ஆலங்​குளம் அருகே நேற்​று ​முன்​தினம் நெட்டூரில் நடந்த திருமண விழா​வில் புகுந்த கும்​பல் ஒன்று, அரி​வாள், கத்தி போன்ற ஆயுதங்​களால் அங்கு இருந்​தவர்​களை சரமாரி​யாக வெட்​டியது. இதில், 6 பேர் பலத்த காயமடைந்​தனர்.

    Advertisement

    இந்த தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​களை கைது செய்​யக்​கோரி நெட்​டூரில் ​மக்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். தாக்​குதல் சம்​பவத்​தில் ஈடுபட்​ட​வர்​களை பிடிக்க மாவட்​டம் முழு​வதும் வாகன சோதனை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. இதில் 3 சிறு​வர்​கள் உள்பட 8 பேரை போலீ​சார் கைது செய்​தனர்.

    ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோயில் தெருவில் உள்ள வாலிபர் ஒருவருக்கு நேற்று முன் தினம் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது பிளக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக மணமகன் வீட்டை சேர்ந்த நபர்களுக்கும் மதுபோதையில் அங்கு வந்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர், கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடியுள்ளனர்.

    Advertisement

    இந்நிலையில், இந்த வழக்கில் ஐயப்பன் என்பவரை சுட்டுப் பிடித்தது போலீஸ். தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன், போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக போலீசார் அவரைச் சுட்டுப் பிடித்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    English Summary

    In connection with a case near Alangulam in which six people were hacked with sickles, the police shot and apprehended an individual named Ayyappan. Ayyappan, a native of Nettur who had been absconding, was shot and captured by the police in self-defense after he attempted to attack the officers. Eight other individuals have already been arrested in connection with this case.