திருவள்ளூர்: திருவள்ளூர் அரண்வாயிலில் உள்ள தனியார் பியர் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பியர் தொழிற்சாலையில் பணியில் இருந்த 2 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். இதன்பின் உடனடியாக மருத்துவக் குழுவினரை வரவழைக்கப்பட்டு இருவருக்கும் சிகிக்சை அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் பியர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பீர் பாட்ல்களில் நிரப்புவதற்கு கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டையாக்சைடு ஆகிய வாயுக்களுடன் அமோனியா வாயுவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இன்று திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
பீயர் தயாரிப்பின் போது அதன் இயல்பான சுவை மாறாமல் இருக்கவும், அதில் நுரை மற்றும் புத்துணர்ச்சி குறையாமல் இருக்க இந்த வாயுக்கள் பயன்படுத்தப்படுகிறது. சில பிரீமியம் ரக பியர்களில் மென்மையான நுழை அமைப்பை பெறவும் பீட் பாட்டிலுக்கு ஆக்ஸிஜன் புகுந்து பியர் கெட்டுப் போகாமல் தடுக்கவும் நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழிற்சாலையும் தயாரிக்கப்படும் பியர் வகைகளை குளிர்விப்பதற்காக அமோனியா வாயு பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே திடீரென சிலிண்டரில் இருந்து லேசான அமோனியா கசிவு ஏற்பட்டு பயணியில் இருந்த பணியாளர்கள் 2 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக தொழிற்சாலை சார்பாக மருத்துவக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடொஇயாக வரவழைக்கப்பட்டனர். அதேபோல் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட சிலிண்டரில் இருந்து முற்றிலுமாக அந்த அமோனியா வாயு வெளியேறுவது தடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்று தொழிற்சாலை நிர்வாகம் சர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாந்தி மயக்கம் ஏர்பட்ட 2 பேருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுது நேரம் தொழிற்சாலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.