தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு


சென்னை: தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் 2014-2018-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது.

புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் எம்.பி.தேர்வு செய்யப்பட்டார். சீனியர் துணைத்தலைவராக ஏ.சண்முகமும் (திருச்சி), துணை தலைவர்களாக பழனிசாமி (திண்டுக்கல்), செந்தியப்பன் (விருதுநகர்), மோகன்குமார் (திருப்பூர்), முத்துகுமரன் (கடலூர்), ஜமாலுதீன் (வேலூர்) ஆகியோரும், பொதுச்செயலாளராக அசோக் பாஜாஜூம் (சென்னை), இணைசெயலாளராக ராஜ்மோகனும் (தஞ்சாவூர்), பொருளாராக ராம்குமாரும் (திருச்சி) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Have a great day!
Read more...

English Summary

Dr Anbumani Ramadoss MP was elected President of the Tamil Nadu Badminton Association at the Annual General Body meeting.