விஜய் போல் மாஸ் இருக்கு.. புதிய அரசியல் கட்சி தொடங்கும் அண்ணாமலை? பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்!

  • சென்னை: தமிழ்நாட்டில் இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தவெக அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது. சட்டசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கிய விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளில் கணிசமானோர் தவெக பக்கம் சாய்ந்து வருகின்றனர்.

    Advertisement

    உள்ளாட்சித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் தவெகவில் இணைவோரின் எண்ணிக்கை அதிரி புதிரியாக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் தவெக அடைந்துள்ள வெற்றி பல்வேறு கட்சிகளுக்கும் பின்னடைவாக மாறியுள்ளது. குறிப்பாக 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து கூட்டணி அமைத்து சுமார் 18% வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 2.97%ஆக குறைந்துள்ளது.

    Advertisement

    இதனால் பாஜகவில் அடிப்படை கட்டமைப்பு முதல் தலைமை வரை மாற்றம் செய்ய டெல்லி தலைமை ஆலோசித்து வருகிறது. விஜய்யின் அரசியலுக்கு மாற்றாக மற்றொரு இளம் தலைவரை கொண்டு வர வேண்டும் என்று கருதுகிறது. இதற்கு அண்ணாமலையின் பெயர் அடிபட்டாலும், அவர் மாற்று திட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாகவே அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வட்டமடித்து வருகின்றன. அதற்கேற்ப தவெக கட்சித் தொடங்கிய 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் மாற்றம் வேண்டும் என்று சொல்வோரின் வாக்குகளை தவெக அறுவடை செய்துள்ளது. விஜய்யை போலவே அண்ணாமலைக்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு ஆதரவு அலை இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரை மூலம் தனக்கென ஒரு தனி வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளார். எனவே, அவர் தேசியக் கட்சியின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, தனியாகப் பிராந்தியக் கட்சி தொடங்கினால் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று பேசத் தொடங்கியுள்ளனர்.

    ஆனாலும், நான் என்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டனாகவே நீடிப்பேன், தேசியத் தலைமையின் உத்தரவை ஏற்பேன் என்று அண்ணாமலை தரப்பு இந்த யூகங்களை மறுத்திருந்தாலும், தமிழக பாஜகவுக்குள் இருக்கும் 'அண்ணாமலை ஆதரவாளர்கள் vs சீனியர் தலைவர்கள்' இடையேயான முட்டல் மோதல்கள் இன்னும் ஓயவில்லை என்பதே நிதர்சனம்.

    Advertisement

    அதிமுகவிலும் கொங்கு மண்டல லாபி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி இருக்கிறது. இதனால் கொங்கு மண்டலத்தில் செல்வாக்குடன் இருக்கும் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கினால், அது அவருக்கு பலமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கினாலும், பாஜக தலைமை அவருக்கு எதிராக இருக்காது என்று பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே ரஜினிகாந்த் தொடங்கவிருந்த கட்சியில் தான் அண்ணாமலை சேரவிருந்தார். இதனால் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலமாக பாஜகவின் கொள்கையை பேசும் மாநிலக் கட்சி என்ற அடையாளத்தை அண்ணாமலை கட்சி பெறும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Annamalai: Annamalai to Launch New Party? Speculations Grow Amid TVK Vijay Rise and TN BJP Rift