கும்பகோணம்: தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கும்பகோணத்தில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக தீவிரமாக முன்வைத்தது. ஆனால், தவெக ஆட்சிக்கு வந்தும் கூட காட்சிகள் மாறவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து, அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், கும்பகோணம் மாநகரப் பகுதியில் கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கும்பகோணம் ஜாமியா நகர் பகுதியில் வசித்து வருபவர் அஸ்லம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் இருவர், விலை உயர்ந்த (பல்சர்) இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இருசக்கர வாகனம் திருட்டு