கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!

  • சென்னை: கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனமாடும் போது ஏற்பட்ட தகராறில் காரை ஏற்றி இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் பகுதியை சேர்ந்த இளம் பெண் யான்சி (18). இவர் சென்னையில் உள்ள இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக சென்னை வந்து தோழியின் வீட்டில் தங்கி இருந்தார் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்நிலையில் நேற்று இரவு 17 வயது சிறுமியும் தனது தோழியுமான பெண் ஒருவருடன் சேர்ந்து கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பார் ஒன்றிற்கு சென்றுள்ளார். அவர்களுடன் ஆண் நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர். மறுபுறம் அதே பாருக்கு சுமந்த் சக்திவேல் என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார்.

    மதுபான பார்

    அங்கே மது குடித்துவிட்டு நடனமாடும் போது இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாரில் இருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியே அனுப்பி உள்ளனர். நள்ளிரவு நேரத்தில் வெளியே வந்த இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு சுமந்து சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் சென்றுள்ளனர். யான்சி அம்மா அவரது நண்பர்களும் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

    Advertisement

    காரை மோதி கொலை

    அப்போது மது போதையில் இருந்த சுமந்து சக்திவேல் வேகமாக சென்று கோயம்பேடு பாலத்தின் கீழே இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் யான்சி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவருக்கு பின்னர் அமர்ந்து வந்த 17 வயது சிறுமி பலத்த காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிசிடிவி காட்சி

    இந்த விபத்தை ஏற்படுத்திய சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த கோயம்பேடு கே11 போலீசார், சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிர படுத்தினார்.

    Advertisement

    6 பேர் கைது

    பின்னர் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சுமந்து சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை புதுச்சேரி போலீசார் உதவியுடன் கைது செய்தனர். அதுமட்டுமின்றி சென்னை விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்த சுமந்து சக்திவேல் நண்பர்கள் பாலகுரு மற்றும் கிஷோர் ஆகிய வரையும் கைது செய்தனர். மொத்தம் ஆறு பேரை கைது செய்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Six people arrested after an 18-year-old woman was allegedly killed in a car-hit incident following a dispute at a Chennai bar.