வங்கக்கடலில் காற்றழுத்தம்.. கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • Recommended Video

    கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தின் ஒரு இடங்களில் மழை பெய்தாலும் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மழை பெய்யாத என எதிர்பார்த்துள்ளனர் மக்கள்.

    Advertisement

    உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை

    நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. சென்னையிலும் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

    இந்நிலையில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கடலோர மாவட்டங்கள், உள் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக வளிமண்டலத்தில் 2 காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நேற்று மழை பெய்தது.

    ‛மஞ்சள் அலர்ட்’ .. 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. நெக்ஸ்ட் 2 மணிநேரம் முக்கியம் - வானிலை மையம்

    சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

    English Summary

    Chennai Meteorological center has said coastal area of Tamil nadu will rain due to low depression in bay of bengal.
    Advertisement