மூன்றரை அடி உயர பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை.. சொந்தச் செலவில் தங்க சங்கிலி அணிவித்த கலெக்டர்


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மூன்றரை அடி உயர பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து குழந்தையை நேரில் பார்த்த கலெக்டர் கந்தசாமி, அருண் சந்தர் என பெயரிட்டு சொந்த செலவில் தங்க சங்கிலி அணிவித்தார்.

தண்டராம்பட்டு தாலுக்கா கொளுந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (30). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி உமா (28). இவர் உயரக் குறைபாடு பிரச்சினை கொண்டவர், மூன்றரை அடி உயரமே உடையவர்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரவசத்துக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 4-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

சாதாரண எடை

குழந்தை சுமார் 2 கிலோ 200 கிராம் எடை இருந்தது. முன்னதாக உமாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து அந்த குழந்தைக்கு அருண்சந்தர் என பெயரிட்டார். மேலும் அவரது தனது சொந்த செலவில் 7 கிராமில் தங்க சங்கிலியையும் பரிசாக அளித்தார்.

அறுவை சிகிச்சை

பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணையும், பிறப்பு சான்றிதழும் ஆட்சியர் வழங்கினார். இதையடுத்து ஆட்சியர் மருத்துவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். உமாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ராஜலட்சுமி கூறுகையில், உமாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்தோம்.

மூச்சுத் திணறல்

வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. அதற்காக மயக்கவியல், எலும்பு பிரிவு டாக்டர்கள் மற்றும் சிறப்பு குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். அறுவை சிகிச்சையின் போது உமாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் அது சீரானது.

இறங்கியதாக மருத்துவர் தெரிவித்தார்

எங்களது முயற்சியில் வெற்றி பெற்றோம். சில ஆண்டுகள் கழித்து தான் அந்த குழந்தைக்கு மரபணு கோளாறு உள்ளதா? என்று கண்டறிய முடியும். அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும், சிறந்த டாக்டர்களும் இருந்ததால் இந்த முயற்சியில் நாங்கள் இறங்கியதாக மருத்துவர் தெரிவித்தார்.

Have a great day!
Read more...

English Summary

Thiruvannamalai Collector Kandasamy presented gold chain for Dwarf's woman's new born baby.