தாராபுரத்திலும் அதிமுகவுக்கு அடிமேல் அடி.. இரண்டாமிடமும் காலி.. வேகமாக முன்னேறும் திமுக

  • தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிக்கிறது. அதிமுக மதுராந்தகத்தில் மூன்றாமிடம், தாராபுரத்தில் இரண்டாமிடத்திலும் இருந்தது. தற்போது தாராபுரத்தில் அதிமுகவை மூன்றாமிடத்திற்கு தள்ளி திமுக இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்தது. அதிமுகவில் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தனர். முதல்கட்டமாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைதேர்தல் கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

    Advertisement

    தாராபுரத்தில் டிவிஸ்ட்

    மதுராந்தகம், தாராபுரம் இரண்டுமே அதிமுகவின் சிட்டிங் தொகுதிகளாக இருந்தன. இரண்டிலும் வெற்றி பெறுவது அதிமுகவின் கௌரவ பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஆட்சியை தக்க வைக்க இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தவெகவுக்கும் அவசியமாக இருந்தது. மறுபக்கம் பலமான எதிர்க்கட்சியாக செயல்பட தேர்தலில் தங்கள் செல்வாக்கை நிரூபிப்பது திமுகவுக்கும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    மதுராந்தகத்தில் ஆரம்பத்தில் இருந்தே தவெக முன்னிலை வகிக்கிறது. திமுக இரண்டாமிடத்திலும், அதிமுக மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. தாராபுரத்தில் ஆரம்பத்தில் அதிமுக முன்னிலை வகித்தது. தவெக இரண்டு, திமுக மூன்றாம் இடத்திலும் இருந்தது. 5 சுற்றுகள் வரை இந்த நிலை நீடித்தது. ஆறாவது சுற்றில் இருந்து தவெக முன்னிலை வகிக்க தொடங்கியது. 9 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை வகிக்கிறார்.

    Advertisement

    அதிமுகவுக்கு ஷாக்

    அதிமுக இரண்டாமிடத்தில் இருந்தது. ஆனால் தவெக, அதிமுக இடையே வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தது. இந்நிலையில் 9 சுற்றுகள் முடிவில் திமுக இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. மீதம் எண்ணப்படவுள்ள மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வலுவாக உள்ளது. அதனால் வரும் சுற்றுகளில் திமுக கை ஓங்க அதிக வாய்ப்புள்ளது. மதுராந்தகத்தை தொடர்ந்து தாராபுரத்திலும் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Dharapuram by election TVK leading with 6,000 votes. ADMK slipped to third from second. However DMK Jumped to second place.