தவெக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகள்.. தாராபுரத்தில் பட்டியலிட்ட முதல்வர் விஜய்

  • தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். தவெக வேட்பாளரை ஆதரித்து முதல்வப் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தவெக ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை முதல்வர் விஜய் பட்டியலிட்டார்.

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தலின் பரபரப்பு ஓய்வதற்குள் இடைத்தேர்தல் பரபரப்பு தொற்றி கொண்டது. முதல்கட்டமாக மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் தவெகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கே தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தாராபுரத்தில் விஜய்

    தவெகவுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்கள் ஆதரவுடன் தவெக ஆட்சியில் உள்ளது. தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. அமைச்சர்கள், முன்னள் அமைச்சர்கள் என பெரிய அணியே இரண்டு தொகுதிகளிலும் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

    இந்நிலையில், தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரிப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக முதல்வர் விஜய் கோவை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரத்திற்கு வந்தடைந்தார். சில இடங்களில் முதல்வர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்ட நிலையில், வழிநெடுகிலும், பொதுமக்கள், தவெகவினர் பிரமாண்ட வரவேற்பளித்தனர். தொடர்ந்து, தாராபுரம் பிரச்சாரத் திடலுக்கு வந்தடைந்த முதல்வர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை வரவேற்றார். செம்மலைக்கு தவெக துண்டு அணிவித்து முதல்வர் விஜய் அவரை வரவேற்றார்.

    Advertisement

    நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்

    பின்னர், முதல்வர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பேசியாதவது: கொங்குநாட்டு தங்கங்களே, சிங்கங்களே, சொந்தங்களே. மதுராந்தகத்தில் கூறியதைத் தான் இங்கும் கூறுகிறேன். நான் முதலமைச்சராக இங்கு வரவில்லை.

    உங்கள் வீட்டு அண்ணணாக, தம்பியாக, பிள்ளையாக, தாய்மாமனாக வந்திருக்கிறேன். தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். ஊழல், லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகத்தை முழுமூச்சோடு உறுதிப்படுத்தி வருகிறோம்.

    100 நாட்களில்..

    அரசுப் பள்ளிகளின் கீழ் உள்ள 716 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறப்பு படை அமைக்கப்பட்டு, புதிய பணியிடங்கள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் 2 முதல் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும். நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    தாய்மாமன் திட்டத்தில் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. 100 நாட்களில் 1 கோடி லட்சம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 200 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    முதல்வர் வருகையையொட்டி, தாராபுரம் நகரம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுக்கூட்டத்தில் QR குறியீடு கொண்ட அனுமதிச்சீட்டு பெற்ற 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    3,500 போலீசார் பாதுகாப்பு

    முதல்வர் விஜய் வருகையையொட்டி தாராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் சுமார் 3,500 போலீசார் ஈடுபட்டனர். முதல்வரின் பயணப்பாதை, பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், முக்கிய சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    English Summary

    Chief Minister Vijay to campaign in Dharapuram today. Due to his visit police implemented heavy restrictions in Coimbatore and Tiruppur.