ரூ 31 கோடி செலவு செய்து தாராபுரம் எம்எல்ஏ ஆனேனா? அது சித்தரிக்கப்பட்ட வீடியோ! சத்தியபாமா மறுப்பு

  • தாராபுரம்: "கடந்த சட்டசபை தேர்தலில் நான் ரூ 31 கோடி செலவு செய்தேன்" என சமூகவலைதளங்களில் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்று என தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா மறுப்பு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தாராபுரம் தொகுதிக்குள்பட்ட மதுக்கம்பாளையம் வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த சத்தியபாமா, கடந்த சட்டசபைத் தேர்தலில் ரூ 31 கோடி செலவு செய்து எம்எல்ஏவானதாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டது. எனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால்தான் என்னை பற்றி சித்தரித்து பொய்யான வீடியோக்களை பரப்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. தொகுதி முழுவதும் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 23 ஆயிரத்து 825 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, தமிழக வெற்றிக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.

    22 வேட்பாளர்கள் போட்டி

    22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 பேலட் யூனிட்கள் பயன்படுத்தப்படுகின்றன. 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 ஆயிரம் காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Advertisement

    முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வரும் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    இதைத் தொடர்ந்து தாராபுரம் ஊராட்சி மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அதிகாலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் இன்று ஏராளமான பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.

    வாக்குப்பதிவு ஏற்பாடுகள் ஜரூர்

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் (VVPAT), கட்டுப்பாட்டு அலகுகள் வாக்குச்சாவடிகளில் பொருத்தும் பணி நிறைவு

    Advertisement

    இடைத்தேர்தலையொட்டி தாராபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலுக்காக 3500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தாராபுரத்தில் காலை 9 மணி நிலவரம்

    வாக்குச்சாவடி வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாராபுரத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.55 வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த 2026 சட்டசபை தேர்தலின் போது தாராபுரத்தில் காலை 9 மணி நிலவரப்படி 18.88 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

    தாராபுரம் சத்தியபாமா வாக்கு பதிவு

    அந்த வகையில் தாராபுரத்தை அடுத்து முதுக்கம்பாளையம் வாக்குச் சாவடியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்குகளை பதிவு செய்துள்ளார். வாக்குப்பதிவுக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தன்னை பற்றி வெளியாகும் வீடியோ சித்தரிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

    Advertisement

    வீடியோ பொய்

    அப்படி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம். அந்த வீடியோவில் சத்தியபாமா போல் ஒருவர் பேசுகையில், " போன தடவை 31 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறேன். ஒரு பைசா கொடுக்கவில்லை" என பேசுவது போல் வீடியோவில் இருக்கிறது.

    45 லட்சம் மட்டுமே

    தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு வேட்பாளர் ரூ 45 லட்சம் வரை மட்டுமே தேர்தலுக்காக செலவு செய்ய வேண்டும். ஆனால் 31 கோடி செலவு செய்ததாக சத்தியபாமா பேசுவது போன்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Dharapuram TVK candidate Sathyabama denies the viral video over Rs 31 crore spent in previous Assembly election 2026 calling it as fabricated one.