சென்னை டூ குமரி, தென்காசிக்கு சிறப்பு ரயில்கள்.. தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே.. புக்கிங் எப்போது?

  • சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து தென்காசி மற்றும் குமரிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, வரும் நவம்பர் 5 ஆம் தேதி சென்னையில் இருந்து குமரிக்கும், 9 ஆம் தேதி குமரியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதே போன்று, நவம்பர் 7 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கும், 9 ஆம் தேதி தென்காசியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது.

    Advertisement

    தீபாவளி சிறப்பு ரயில்கள்

    தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தங்கி பணிபுரிபவர்கள் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட விரும்புவர். இதற்காக இதுவரை டிக்கெட் கிடைக்காமல் இருப்பவர்கள் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் அறிவிப்பை எதிர்பார்த்து காத்து இருப்பார்கள். அவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    சென்னை டூ குமரிக்கு சிறப்பு ரயில்

    இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து குமரிக்கும், சென்னை தாம்பரத்தில் இருந்து - தென்காசிக்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    Advertisement
    பெங்களூர் டூ தூத்துக்குடிக்கு ஸ்பெஷல் ரயில்.. தீபாவளிக்கு ஊருக்கு போறவங்க நோட் பண்ணுங்க!

    சென்னை எழும்பூர் டூ குமரி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (வண்டி எண் 06151) வரும் நவம்பர் 5 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.15க்கு குமரியை சென்றடையும். இந்த ரயிலில் ஒரு ஏசி இரு அடுக்கு பெட்டியும், 3 ஏசி மூன்றடுக்கு பெட்டியும், 11 ஸ்லீப்பர் பெட்டிகளும், 5 செகண்ட் கிளாஸ் பெட்டிகளும், லக்கேஜ்ஜுக்கு 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    குமரி டூ சென்னை சிறப்பு ரயில்

    மறுமார்க்கத்தில் குமரி டூ சென்னை எழும்பூர் (வண்டு எண் - 06152) சிறப்பு ரயில், குமரி ரயில் நிலையத்தில் இருந்து வரும் நவம்பர் 9 ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயிலிலும், ஒரு ஏசி இரு அடுக்கு பெட்டியும், 3 ஏசி மூன்றடுக்கு பெட்டியும், 11 ஸ்லீப்பர் பெட்டிகளும், 5 செகண்ட் கிளாஸ் பெட்டிகளும், லக்கேஜ்ஜுக்கு 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். வழக்கமான சென்னை - குமரி - சென்னை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

    Advertisement

    தென்காசிக்கு சிறப்பு ரயில்

    தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் வண்டி எண் (06049) தாம்பரத்தில் இருந்து வரும் நவம்பர் 7 ஆம் தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.45 மணிக்கு தென்காசியை சென்றடையும்.

    Special train: நெல்லை டூ சென்னைக்கு சிறப்பு ரயில்.. பயணிகளுக்கு சர்ப்ரைஸ் தந்த தெற்கு ரயில்வே

    இதே போன்று மறுமார்க்கத்தில் தென்காசி டூ தாம்பரம் சிறப்பு ரயில் (06050) செங்கோட்டையில் இருந்து வரும் 9 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை தாம்பரத்தை வந்தடையும்.. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. என்று கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Diwali special trains: To facilitate travel for passengers heading to their hometowns for the Diwali festival, Southern Railway has announced special trains from Chennai to Tenkasi and Kanyakumari. Accordingly, a special train has been scheduled from Chennai to Kanyakumari on November 5, and from Kanyakumari to Chennai on November 9.