Vijay: சட்டசபைக்கு விஜய் வரட்டும்! எலும்பை உடைத்து வீட்டுக்கு அனுப்புவோம்! திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

  • கோவில்பட்டி: சட்டசபையை கூட்டும் போது எலும்பை உடைத்து வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என தமிழக முதல்வர் விஜய்யை ஒருமையில் மிரட்டும்தொனியில் சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்எல்ஏ பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வளவு கேவலமான முதல்வரை (விஐய்) தமிழக மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது.

    Advertisement

    இனி வரும் தேர்தல்களில் 5% வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்றுப் போகும். பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தேர்தலில் தோற்றபோது அப்போது இருந்த தலைவர்கள் நாகரீகமாக பேசினார்கள்.

    ஆனால் சட்டசபையில் உங்கப்பாவை தேடிக் கொண்டிருக்கிறேன் என விஜய் விமர்சித்துள்ளார். இது போல் ஒரு பேச்சை நான் எங்கேயும் கேட்டதில்லை.

    எங்களை என்ன கோமாளிகள்னு விஜய் நினைக்கிறாரா, சட்டசபைக்குள் வைத்து பார்த்துக் கொள்வோம். சட்டசபையை கூட்டும் போது விஜய்யின் எலும்பை உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம். தைரியமிருந்தால் சட்டசபையை கூட்டி பார்க்கட்டும்.

    Advertisement

    யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து சென்னைக்கு ஓடியது யார்? நாங்க ஒன்னும் பயந்து ஓடல. என்னாது கொளத்தூர் தொகுதியில் கொத்து பரோட்டா போட்டீங்களா? இதை போல் ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

    விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்தது திமுக. இன்றைக்கு தமிழகத்தில் மூன்று வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. பாதுகாப்பாக இருக்க முடியவில்லை.

    அடுத்த நாள் என்ன செய்யப் போகிறான் என்ற சிந்தனை முதல்வருக்கு கிடையாது. அவருடையஅமைச்சருக்கு கிடையாது. 2000 ரூபாய் காசு வாங்கியதற்காக திருச்செந்தூர் கோயில் குருக்களை சஸ்பெண்ட் செய்கிறார் அமைச்சர் ரமேஷ்! ஆனால் ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? முதல்வரே ஊழலின் மொத்த உருவம்தான். 100 ரூபாய் சினிமா டிக்கெட்டை ரூ 1000-க்கு விற்றவர்தானே

    Advertisement

    எங்கள் தலைவர்களை அவமரியாதை படுத்தினால் அடித்து விரட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் என்ன பேசினாலும் அடிப்போம் திமுகவிற்கு என்று ஒரு அறம் இருக்கிறது என்றார். ஒரு முதல்வரின் எலும்பை உடைத்து விடுவோம் என மார்கண்டேயன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Vilathikulam MLA Markandeyan give threat to CM Vijay in a public speech. He uses more derogatory statement on Vijay.