சென்னை: "இது நாடா? இல்லை காடா? என்று தேர்தலுக்கு முன் கேட்டவர், இன்று தமிழ்நாட்டை வேட்டைக் காடாகவும் சுடுகாடாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டாரா? எதையும் கண்டுகொள்ளாமல், '9 டூ 5 சி.எம்' வீக் எண்ட் விடுமுறையில் not reachable modeல் ஜாலியாக இருக்கிறார் போலிருக்கிறது" என திமுக விமர்சித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளான நேற்று தமிழ்நாடு முழுவதும் 13 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. காவல் அதிகாரி, 17 வயது சிறுவர்கள், 70 வயது மூதாட்டி என 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு! சட்டம்-ஒழுங்கு சந்திரிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், 13 கொலைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு தவெக அரசை விமர்சித்துள்ளது திமுக. "தமிழ்நாடு சுடுகாடாவது பற்றி எதையும் கண்டுகொள்ளாமல், '9 டூ 5 சி.எம்' வீக் எண்ட் விடுமுறையில் not reachable modeல் ஜாலியாக இருக்கிறார் போலிருக்கிறது" என திமுக விமர்சித்துள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "Not Reachable Dummy CM! தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 13 கொலைகள். ஸ்டாண்ட-அப் காமெடியன் 'பண்டிகை காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா..' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கொலைகளைத் தடுக்க வக்கில்லாத அரசு தனது காங்கிரஸ் அடிமைகளை வைத்து சுடுகாட்டுக்கு வழி சொல்கிறது! துணை சபாநாயகர் ஒருவரை அடித்து வீடியோ வைரலான செய்தியை மறைக்க அடி வாங்கியவரை மிரட்டி பேச வைத்து அதை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் 'என்னை மிரட்டித்தான் பேச வைத்தார்கள்' என்று அடி வாங்கியவர் போட்டு உடைத்துவிட்டார். பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு த.வெ.க எம்.எல்.ஏவே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இச்செய்திகள் எதையுமே முதலமைச்சர் விஜய் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என அதிகாரிகள் புலம்புவதாக செய்திகள் வருகின்றன. "இது நாடா? இல்லை காடா?" என்று தேர்தலுக்கு முன் கேட்டவர், இன்று தமிழ்நாட்டை வேட்டைக் காடாகவும் சுடுகாடாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டாரா? எதையும் கண்டுகொள்ளாமல், '9 டூ 5 சி.எம்' வீக் எண்ட் விடுமுறையில் not reachable modeல் ஜாலியாக இருக்கிறார் போலிருக்கிறது. மக்களின் உயிர் பறிக்கப்படுவதற்கு வெட்கமே இல்லாமல் வக்காலத்து வாங்குகிறது தற்குறி அரசு" எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.