தமிழ்நாடு அரசின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? 2026 நிலவரம் என்ன?

  • சென்னை: தமிழ்நாடு அரசுக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு வருமானம் வருகிறது, எந்தெந்த துறைகள் மூலம் அதிகப் பணம் கிடைக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் நாம் பார்ப்போம். 2025-26 நிதியாண்டின்படி, தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் (Revenue Receipts) ₹3,31,569 கோடி ஆகும். இதனை ஒரு வருடத்தின் 365 நாட்களோடு வகுத்துப் பார்த்தால், தமிழக அரசின் ஒரு நாள் சராசரி வருமானம் மட்டும் சுமார் ₹908 கோடி என்பது தெரியவந்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கூறியுள்ளார். மகளிர் உரிமை தொகை 2500, தங்கம், தாய் மாமன் மோதிரம், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி தொகை என பல திட்டங்களை கூறியுள்ளார். இந்த திட்டங்களை நிறைவேற்றும் அளவிற்கு போதிய நிதி உள்ளதா என்றால் ஓரளவே இருக்கிறது. அதேநேரம் கடனுக்கான வட்டிக்காக அதிக அளவில் பணம் செலவாகி வருகிறது. எனினும் இந்த பதிவில் தமிழ்நாடு அரசின் கஜானாவை நிரப்பும் அந்த முக்கிய வருவாய் மூலங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்:

    Advertisement

    1. முதலிடத்தில் ஜிஎஸ்டி (GST / வணிக வரி)

    தமிழக அரசின் ஒட்டுமொத்த வருவாயில் சிங்கப்பங்கைக் கொடுப்பது வணிக வரிதான்.

    வருமானம்: ₹1,21,853 கோடி

    சதவீதம்: 36.8%

    மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 3-ல் 1 பங்கு ஜிஎஸ்டி மூலமாகவே கிடைக்கிறது.

    2. மத்திய அரசின் வரிப் பங்கு (Share in Central Taxes)

    மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து தமிழகத்திற்குப் பிரித்துக் கொடுக்கப்படும் பங்கு இதில் இரண்டாவது பெரிய பங்களிப்பாக உள்ளது.

    வருமானம்: ₹66,543 கோடி

    சதவீதம்: 20.1%

    3. டாஸ்மாக் மற்றும் மதுபான வரி (TASMAC & Excise Duties)

    தமிழகத்தில் அதிக விவாதங்களைக் கிளப்பும் மதுபான விற்பனை மற்றும் அதற்கான வரி வருவாய் அரசாங்கத்தின் 3-வது பெரிய வருவாய் மூலமாகும்.

    Advertisement

    வருமானம்: ₹39,478 கோடி

    சதவீதம்: 11.9%

    4. பெட்ரோல் & டீசல் மீதான வாட் வரி (Petrol & Diesel VAT)

    வாகன எரிபொருட்கள் மீதான மாநில அரசின் வரி விதிப்பு மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.

    வருமானம்: ₹38,572 கோடி

    சதவீதம்: 11.6%

    5. இதர முக்கிய வருவாய்கள்:

    இவை தவிர, அரசின் பிற துறைகள் மூலமாகவும் கஜானாவிற்குப் பணம் வந்து சேருகிறது:

    பத்திரப்பதிவு துறை வருவாய்: ₹25,067 கோடி (7.6%)

    வாகன வரி (RTO): ₹11,617 கோடி (3.5%)

    மத்திய அரசின் நிதியுதவி (Grants-in-Aid): ₹10,590 கோடி (3.2%)

    Advertisement

    மின்சார வரி (Electricity Duty): ₹9,180 கோடி (2.8%)

    பிற வருவாய்கள் (கட்டணங்கள், அபராதங்கள் போன்றவை): ₹8,669 கோடி (2.5%)

    தமிழக அரசின் ஒரு நாள் வருவாயான ₹908 கோடியில், சுமார் ₹334 கோடி ஜிஎஸ்டி மூலமும், ₹108 கோடி டாஸ்மாக் மூலமும், ₹105 கோடி பெட்ரோல்-டீசல் வரி மூலமும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தரவுகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ 2025-26 பட்ஜெட் ஆவணங்களின்படி கணக்கிட்டுள்ளோம்.

    English Summary

    Do you know what the Tamil Nadu government's daily revenue is? Do you know what the situation will be in 2026?