மேக்கப் மேனுக்கு விஜய் அரசு பதவியா? எடப்பாடி பழனிசாமி சொன்னதை கேட்டீங்களா?

  • மதுராந்தகம்: இன்னும் விஜய்யின் மேக்கப் மேனுக்கு மட்டும்தான் அரசுப் பதவி கொடுக்கவில்லை, பாக்கி எல்லாருக்கும் கொடுத்தாகிவிட்டது என மதுராந்தகத்தில் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார்.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட்- கம்யூனிஸ்ட் என 5 முனை போட்டி நிலவுகிறது.

    Advertisement

    நாள்தோறும் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. அந்த வகையில் மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்தை ஆதரித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசுகையில், "குதிரை பேரம் காரணமாக இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது. தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோதியிருக்க வேண்டும். கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் கட்சி மாறி தவெகவில் இணைந்துள்ளனர். வெற்றி தோல்வி எல்லாமே சகஜம்.

    அதற்கெல்லாம் அதிமுக அஞ்சாது. மக்களை பற்றி மட்டுமே கவலைப்படம் ஒரே இயக்கம் அண்ணா திமுக. எங்களை பார்த்து தூர்ந்து போன கட்சி என்கிறார்கள். அதிமுகவில் இருந்து விலைக்கு வாங்கி வேட்பாளரை நிறுத்திவிட்டு இன்றைக்கு என்னென்னவோ பேசுகிறார்களே.. இந்த ஜாம்பவான்கள் எல்லாம் கரூர் சம்பவம் நடந்த போது எங்கே சென்றார்கள்?

    Advertisement

    ராஜினாமா செய்த 5 நிமிடங்களில் தவெக உறுப்பினர் அட்டை பெற்றனர். அத்துடன் ராஜினாமாவை ஏற்பதற்கு முன்பே தவெகவில் இணைந்துவிட்டனர். கரூர் சம்பவத்தின்போது முதல்வர் விஜய் 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

    நீங்களா நாட்டை காப்பாற்ற போகிறீர்கள்? 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத ஒரு கட்சித் தலைவர் எப்படி மக்களை காப்பாற்றுவார் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.

    கரூர் துயர சம்பவத்தின் போது 15 நாட்கள் தவெக அலுவலகம் மூடப்பட்டது. ஆனால் மக்களோடு மக்களாக துணை நின்றது அதிமுக. ரீலும், ரீல்ஸும்தான் தவெகவின் மூலதனம்.

    Advertisement

    52 ஆண்டுகளாக அதிமுகவுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கள் அனுபவம் அளவுக்கு கூட உங்கள் வயது இல்லை. ஆனால் அவர்கள் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை. அடக்கி வாசிங்க தம்பி. உங்களை போல நிறைய பேரை பார்த்துவிட்டோம்.

    பணத்தாசையின் காரணமாக ஓட்டு போட்ட மக்களை மறந்து தனக்காக உழைத்தவர்களை மறந்து, தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று எதிரணி வேட்பாளராக போட்டியிடுபவரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

    தவெக அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை, தவெக கட்சி தொடங்கி 3 ஆண்டுதான் ஆகிறது. வந்த உடனே இப்படி வேலைகளை செய்தால், இவர்களா தூய்மையான ஆட்சி செய்கிறவர்கள்? குழந்தைளுக்கு மிட்டாயம் கொடுப்பது போல் எம்எல்ஏக்களுக்கு ஆசை காட்டியுள்ளனர்.

    Advertisement

    இதுவரை இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் இப்படி ஒரு இழிவான செயலை செய்ததே இல்லை. தவெக நெல்லிக்காய் மூட்டை போல் அவிழ்த்து விட்டால் சிதறிவிடும். கரூர் வழக்கு இன்னும் முழுமை பெறவில்லை. அது முழுமை பெறும்போது தீர்ப்பு எப்படி இருக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால் அந்த தீர்ப்புக்கு பிறகுதான் அந்த கட்சி தமிழகத்தில் இருக்குா, இல்லையா என்பது முடிவாகும்.

    இன்னும் விஜய்யின் மேக்கப் மேனுக்கு மட்டும்தான் விஜய் அரசு பதவிக் கொடுக்கவில்லை. முதல்வர் விஜய்யுடன் இருக்கும் அனைவருக்கும் அரசு பதவி கொடுத்துவிட்டார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களுக்கு தான் பதவி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

    English Summary

    ADMK Edappadi Palanisamy criticises Vijay that he would have give government post even to Make up man.