செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மகாலட்சுமி நகர் பகுதியில் சாலையோரத்தில் கார் மோதியதில் இறந்த நண்பரின் சடலம் மழையில் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக அவருடைய நண்பர் குடை பிடித்துக் கொண்டிருந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியில் சாலையோரத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தார் முதியவர் ஒருவர். அவர் நேற்று இரவு சாலையோரத்தில் படுத்திருந்த போது அவ்வழியாக வந்த கார் பின்னோக்கி திரும்பியது.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் மீது கார் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். எனினும் மனசாட்சியே இல்லாத அந்த நபர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இது குறித்து தெரிந்ததும் அருகே இருந்த முதியவர், நண்பரின் சடலத்தை பார்த்து அழுதார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் அவரது சடலம் நனையாமல் இருப்பதற்காக அங்கிருந்த ரெயின்கோட், சாக்கு பைகளை போட்டு மூடியதும் இல்லாமல், அந்த சடலத்திற்கு குடை பிடித்தவாறு அமர்ந்திருந்தது காண்போரை நெகிழ செய்தது. இதையடுத்து தகவலறிந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காரை ஏற்றிவிட்டு நிற்காமல் சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது போல் நண்பர்களின் பாசப்பிணைப்பை நாம் சினிமாக்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் இப்படியும் நண்பர்கள் இருப்பார்களா என்பதற்கு அந்த முதியவர்தான் உதாரணம். இந்த அன்பை பார்க்கும் போது நட்புக்காக திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது. அந்த படத்தில் பண்ணையார் விஜயகுமாரிடம் வேலை பார்க்கும் தொழிலாளி சரத்குமார். பண்ணையார் மனைவி கொலை பழியை தன் மீது ஏற்றுக் கொண்டு சிறை செல்கிறார். இதனால் நன்றிக் கடனுக்காக சரத்குமாரின் மகன் சரத்குமாரை (டபுள் ஆக்ஷன்) விஜயகுமார் தன் மகனாகவே வளர்க்கிறார். தனது தாயை கொன்ற சரத்குமாரை பழிவாங்க சிம்ரன் வருகிறார், கொலையில் பின்னணியில் உள்ள உண்மைகள் பின்னர் தெரியவருகிறது. இறுதியில் தந்தை சரத்குமார் உயிரிழந்தை அறிந்த விஜயகுமாரும் அதே இடத்தில் உயிரை விட்டது பார்ப்போரின் கண்களை குளமாக்கியது. நட்பின் இலக்கணத்தை அழகாக சொல்லும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற மீசக்கார நண்பா பாடல் மிகவும் பிரபலம். இந்த பாடல் இன்னொரு முஸ்தபா பாடல் போல் நண்பரின் சிறப்புகளை சொல்லும் விதத்தில் இருந்தது. நண்பன் சரத்குமாருக்காக எல்லாவற்றையும் செய்யும் விஜயகுமார், இறுதியில் உயிரை விடும் சீன் அல்டிமேட் நடிப்பு!செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகத்தில் வேலை.. 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு