Gingee Girl: செஞ்சி சிறுமி மாயம்! CBCID விசாரணையில் திடீர் ட்விஸ்ட்? முழு உண்மையை மறைக்கும் தாய்?

  • செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் சிறுமி உயிருடன் இருக்கிறார் என சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா (7)காணாமல் போனார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில் இந்த சிறுமி மாயமான வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால் கடந்த 21 ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி சிபிசிஐடி எஸ்பி ஜவஹர், டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் ரேவதி ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சிறுமியின் தாயிடம் 3 தினங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அக்கம்பக்கத்தினர், பொதுமக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் சிறுமியின் தாய் ஏதோ உண்மையை மறைப்பதாக கருதுகிறார்கள்.

    12 நாளாக சிறுமியின் நிலை தெரியாததால் சிபிசிஐடி விசாரணையில் அவர் உயிருடன் இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சிறுமி விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    சிபிசிஐடியிடமும் சிறுமியின் தாய் முழுமையான தகவல்களை அளிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. சிறுமியை அங்குள்ள கிணறுகள், கரும்பு தோட்டங்கள், குவிக்கப்பட்டிருக்கும் குப்பை கூலங்களில் எல்லாம் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுமி குறித்து எந்த தகவலும் இல்லை.

    சிறுமி காணாமல் போனது குறித்து பவானியிடம் கேட்ட போது கடந்த 11 ஆம் தேதி குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடினார்களாம். பிறகு இரவு நேரத்தில் வழக்கம் போல் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினராம். சிறுமி தன்னுடன்தான் படுத்து கொண்டிருந்தாராம்.

    ஆனால் திடீரென 3.30 மணிக்கு பார்த்த போது அவரை காணவில்லை என புகார் கொடுத்துள்ளாராம். அது போல் குழந்தையின் தந்தைக்கு காசநோய் இருப்பதால் அவருக்கு தூக்கம் வராது என்பதால் 3 மணி வரை டிவி பார்த்துவிட்டு பிறகுதான் தூங்கச் செல்வார் என்றார். ஆனால் எழுத்து வடிவ புகாரில் காலை 5 மணிக்கு பார்த்த போது சிறுமியை காணவில்லை என்றும் அன்று இரவுதான் கதவை திறந்து வைத்ததாகவும், அன்று மட்டும்தான் கணவர் தூங்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் பவானி கூறியுள்ளார்.

    Advertisement

    எனவே வாய்மொழியில் ஒரு விதமாகவும் எழுத்துப்பூர்வமாக வேறு விதமாகவும் அவர் கூறியதால் போலீஸாருக்கு பவானி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

    English Summary

    CBCID police investigates Gingee missing girl's mother for the straight 3 rd day and found that the girl may be alive.