என் குழந்தையை நான் விற்றுவிட்டேனா? மிரட்டிய போலீஸ்! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர் பேட்டி

  • செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுமியின் தாயிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் சிறுமியின் குடும்பத்தினரும் ஜோதிடம் கேட்பது , குறி கேட்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    Advertisement

    இதுகுறித்து சிறுமியின் தாய் பவானி கூறியிருப்பதாவது: போலீஸார் என்னை மிரட்டி கேட்டனர். குழந்தையை என்ன செய்தாய் சொல்லு என மிரட்டுகிறார்கள். குழந்தையை நானே யாருக்கோ தூக்கி கொடுத்துவிட்டேன் என்கிறார்கள், யாருக்கோ விற்றுவிட்டேன்னு சொல்றாங்க.

    Advertisement

    அப்படி செய்வதென்றால் இத்தனை ஆண்டுகளாக எதற்காக நான் கஷ்டப்பட்டு வளர்க்க வேண்டும்? என்ன மிரட்டினாலும் எத்தனை தடவை கேட்டாலும் என் பதில் இதுதான், நைட் தூங்கின வரைதான் எனக்கு தெரியும். அதன் பிறகு குழந்தை எங்கே போனது என எனக்கு தெரியாது.

    சிபிசிஐடி விசாரணை

    சிபிசிஐடி போலீஸார் இப்போது தான் விசாரிக்க தொடங்கியுள்ளனர். அவர்களின் விசாரணை பரவாயில்லையா என்பது போக போகத்தான் தெரியும். என் குழந்தையின் உயிருக்கு ஏதேனும் ஆபத்தா என்பது குறித்து எனது மைத்துனர் குழந்தையின் பெயரை வைத்து கல்லாடிக்குளத்தில் ஜோசியம் கேட்டுவிட்டு வந்துள்ளார்.

    Advertisement

    ஆயுள் கெட்டி

    அதில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை, ஆயுள் கெட்டி, குழந்தை வந்தால் 4 அல்லது 5 நாட்களுக்குள் திரும்ப வேண்டும், இல்லாவிட்டால் இன்னும் 14 நாட்கள் ஆகும் என சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு இடத்தில் குறி கேட்டோம். அவர்கள் சரியாக சொல்லவில்லை என்கிறார்கள்.

    "என்னை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடிப்பார்கள்" என யாரோ என் அம்மாவிடம் சொல்லிவிட்டார்கள். அவர் பயந்து கொண்டு இருக்கிறார். நான்தான் அவரை பயப்பட வேண்டாம் என கூறியிருக்கிறேன். நாம் உண்மையை சொல்லும் போது எதற்காக பயப்படணும்?

    தெம்பு இல்லை

    அடித்தாலும் என் உடம்பில் தெம்பு இல்லை. இத்தனை நாட்களாக நாங்கள் ஒரு வேளைதான் சாப்பிட்டு வருகிறோம். என் குழந்தையை நினைத்தால் அது கூட இறங்கவில்லை. என் குழந்தை கிடைத்துவிட்டால் போதும். நான் குழந்தையை விற்றுவிட்டதாக கூறும் பழிச்சொல்லுக்கு ஆளாகமாட்டேன். என் குழந்தை சீக்கிரம் கிடைக்கவேண்டும் என பவானி தெரிவித்தார்.

    Advertisement

    நடந்தது என்ன?

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா (7) காணாமல் போனார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிபிசிஐடி போலீஸார்

    இந்த நிலையில் இந்த சிறுமி மாயமான வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால் கடந்த 21 ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 22 ஆம் தேதி சிபிசிஐடி எஸ்பி ஜவஹர், டிஎஸ்பி கீதா, ஆய்வாளர் ரேவதி ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Advertisement

    சிறுமியின் தாயிடம் 3 தினங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் போலீஸார் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சிறுமி காணாமல் போனது ஏன்

    இந்த நிலையில் சிறுமி காணாமல் போனது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ல நிலையில் அக்கம்பக்கத்தினர், பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு விளக்கம்

    இதுகுறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில் சம்பவத்தன்று முதலில் வீட்டிலும் அருகிலுள்ள வயல்களிலும் கால்வாய்ப் பகுதிகளிலும் சிறுமியின் குடும்பத்தினர் தேடியுள்ளனர். இதன் பின்னரும் கிடைக்காததால் காவல்துறையை அவர்கள் அணுகினர்.

    கிணறுகள்

    கிணறுகள், நீர்நிலைகள், விவசாய நிலங்கள், மலைப்பகுதிகள், அருகிலுள்ள கிராமங்களில் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. சிறுமி மாயமான சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் தந்தைக்கு காசநோய் என்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சிறுமி காணாமல் போய் 12 நாட்களான நிலையில் சிறுமி எங்கே என தெரியாமல் பெற்றோர் தவித்து வருகிறார்கள்.

    English Summary

    CBCID police investigates Gingee 7 years girl missing case to her mother severely. 3rd continuous day CBCID camps in the village and do investigation.