திண்டிவனத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. சென்னை - தென் மாவட்டம் செல்லும் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

  • விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற சரக்கு ரயில் ஒலக்கூர் ரயில் நிலைய பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை - விழுப்புரம் - திருச்சி ரயில் மார்க்கத்தில் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    Advertisement

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதால் சென்னை - விழுப்புரம் - திருச்சி ரயில் பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    Advertisement

    சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் ரயில் நிலையம் அருகே வந்த போது திடீரென இந்த ரயில் தடம்புரண்டது. உடனடியாக இந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் தண்டாவளத்தில் இருந்து விலகிய பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    இதற்கிடையே சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ரயில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல அப்படியே பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    English Summary

    A goods train derailed near Tindivanam in Villupuram district, disrupting rail traffic on the Chennai-Villupuram-Trichy route. Several express trains were halted at multiple locations, causing severe inconvenience to passengers and affecting normal railway operations in the region.