அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்

  • நாமக்கல்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 27 தொகுதிகளில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தான் பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை இருந்திருந்தால் இன்னும் கூட ரிசல்ட் போனாலும் போய் இருக்கும் என்று பாஜகவின் மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    Advertisement

    பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார்.இதுதொடர்பாக பாஜகவின் பொதுச்செயலாளர் (அமைப்பு) பிஎல் சந்தோஷ், கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேற்று அண்ணாமலை சந்தித்து தனது ராஜினாமா முடிவு பற்றி தெரிவித்துள்ளார். அவர் புதிய கட்சி தொடங்கும் முனைப்பில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    ஆனால் அவர்கள் அண்ணாமலையை கட்சியில் இருந்து விட விரும்பவில்லை. அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதன்படி டெல்லியிலயே தங்கி இருக்கும்படி அண்ணாமலைக்கு மேலிடம் அறிவுறுத்தி உள்ளதோடு, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அவசரஅவசரமாக பாஜக மேலிடம் டெல்லிக்கு அழைத்துள்ளது. அவர் டெல்லி சென்றுள்ள நிலையில் நாளை நிதின் நபின், அமித்ஷா ஆகியோரை சந்திக்கிறார். அப்போது அண்ணாமலை பற்றி அவர்கள் விவாதிக்க உள்ளனர்.

    இதற்கிடையே தான் நாமக்கல்லில் பாஜக மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கம் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. குறிப்பாக அண்ணாமலையை மையப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தார். இந்த சமயத்தில் பத்திரிகையாளர் ஒருவர், ''அண்ணாமலை புதிதாக கட்சி ஆரம்பித்து உள்ளாராமே?'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கேபி ராமலிங்கம், ''இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். அவரிடம் நீங்கள் யாருமே கேள்வி கேட்கவில்லை. மேலும் கட்சி ஆரம்பிப்பதாக தகவல் தானே வருகிறது. அவர் இன்னும் சொல்லவில்லையே. இதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்'' என்றார்.

    Advertisement

    இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ''அண்ணாமலை மாநில தலைவராக இருந்திருந்தால் சட்டசபை தேர்தலில் ரிசல்ட் வேறு மாதிரி வந்து இருக்கும் என்று சொல்கிறார்களே?'' என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு கேபி ராமலிங்கம், ''அதெல்லாம் உறுதியாக நினைக்கவில்லை. அவர் இருந்திருந்தால் (மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பு வகித்து இருந்தால்) இன்னும் கூட ரிசல்ட் போனாலும் போய் இருக்கும்.

    ஏனென்றால், நாங்க இன்னும் கொஞ்சம் அதிக ஓட்டுகள் வாங்கி திமுக ஜெயித்த இடங்களில் கூடுதலாக ஓட்டுகள் பெற்று, அதிமுகவிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்காமல் போய் ஓட்டு குறைந்து இருக்கலாம். இதனால் தனி ஆட்சியை கூட விஜய் பிடித்து இருப்பார். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். உறுதியாக சொல்கிறேன். இந்த தேர்தல் ரிசல்ட்டை யாராலும் மாற்றி இருக்க முடியாது. பாஜக என்பதற்கு அடையாளம் பிரதமர் நரேந்திர மோடி. அவர் தான் எங்களின் அடையாளம்'' என்றார்.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்து 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் பாஜகவின் ஊட்டி சட்டசபை தொகுதியின் வேட்பாளர் போஜராஜன் மட்டுமே வெற்றி பெற்றார். சாத்தூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் , மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவிநாசி தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும் தோல்வியடைந்தனர். பாஜக வேட்பாளர்கள் 27 தொகுதிகளில் தோல்வியடைந்தனர்.

    இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்திருந்தால் கூடுதலாக வெற்றி கிடைத்து வரும் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், கேபி ராமலிங்கம் அப்படி எல்லாம் நடந்து இருக்காது. அண்ணாமலை பாஜக தலைவராக இருந்திருந்தால் ரிசல்ட் இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    அண்ணாமலையை இப்படி விமர்சனம் செய்துள்ள கேபி ராமலிங்கம் முதலில் அதிமுகவில் இருந்தார். ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 1980, 1984ல் அதிமுகவில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதிமுகவில் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவாளராக வலம் வந்தவர் அதன்பிறகு திமுகவில் இணைந்தார்.

    திமுகவில் முக அழகிரியின் ஆதரவாளராக வலம் வந்தார். 1996-1997 ம் ஆண்டில் திருச்செங்கோடு லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு முக அழகிரியின் லாபியால் திமுகவில் 2010 முதல் 2016 வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தார். திமுகவில் நாமக்கல் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்ததோடு திமுக விவசாய அணியில் மாநிலச் செயலாளர் பொறுப்பில் பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

    Advertisement

    அதன்பிறகு முக அழகிரி மற்றும் அதரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதில் கேபி ராமலிங்கமும் ஒருவர். இவர் திமுகவில் இருந்து விலகி கடந்த 2020ம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார். அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த எல் முருகன் முன்னிலையில அவர் பாஜகவில் ஐக்கியமானார். இதையடுத்து பாஜகவில் மாநில துணை தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    KP Ramalingam slams Annamalai: In the recently concluded Assembly elections, the BJP secured a victory in one constituency while suffering defeat in 27 others. Against this backdrop, K.P. Ramalingam, the State Vice President of the BJP, has leveled sharp criticism, suggesting that had Annamalai been serving as the party's State President, the election results might well have turned out differently.