இதய கோளாறால் கஷ்டப்படும் 1 மாத பிஞ்சு குழந்தை.. சிகச்சைக்கு உதவுங்கள்


சென்னை: இதயக் கோளாறு காரணமாக உயிருக்கு போராடி வரும் ஒரு மாத குழந்தை உயிர் பிழைக்க உதவி செய்யுங்கள்.

சாலினியின் குழந்தை பிறந்த உடனேயே பிறப்பு இதயக் கோளாறு காரணமாக உயிருக்கு போராடி வருகிறது. இந்த ஒரு மாத குழந்தை உயிர் பிழைக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது.

அந்த சின்னஞ்சிறிய பாதம் காற்றில் அசைந்தாடும் போதும் அந்த பிஞ்சு விரல்களுடன் நான் கைகோர்த்து விளையாடிய நினைவுகளும் சரி இன்னும் என் மனதில் நீங்காமல் நிற்கிறது. என்னைப் பார்த்ததும் அவன் விடும் சந்தோஷ சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயான பிறகு இந்த உலகத்திலேயே தன் குழந்தையைத் தான் மிகவும் நேசிப்பாள். அப்படித்தான் நானும் அவனை மிகவும் நேசித்தேன்.

மற்ற பெற்றோர்களைப் போல் தான் சாலினியும் அவரது கணவரும் குழந்தை பிறந்ததை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். அவன் இந்த உலகத்திற்கு வந்ததும் அவனுக்கான பெயர், ஆடைகள், விளையாட்டு பொம்மைகள் என்று அனைத்தையும் யோசித்து யோசித்து வாங்கி வைத்து மகிழ்ந்தார்கள்.

சந்தோஷம் நிலைக்கவில்லை:

இப்படி சந்தோஷமாக இருந்த எங்களுக்கு அந்த சந்தோஷம் ஒரு கணம் கூட நிற்கவில்லை. அவன் தூங்கும் போது அவனுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க வீடே அமைதியாக இருக்கும். அவன் எழுந்திருக்கும் போது அருகில் சென்று பார்த்தால் எங்களைப் பார்த்து அப்பாவித் தனமாக ஒரு மழலைச் சிரிப்பு சிரிப்பான்.

பிறந்த குழந்தை என்றாலே அடிக்கடி மருத்துவரிடம் செக்கப் சென்று வர வேண்டியிருக்கும். அப்படித்தான் அவனின் பெற்றோர்களும். பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு வாரத்திற்கு ஒரு முறை என செக்கப் செய்ய வந்தனர். இதற்காக அவர்கள் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதிருந்தது. அவர்களுக்கு இது கஷ்டமாக இருந்தாலும் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர். அவனும் பயணம் செய்யும் போது தூங்கி விடுவான்.

எப்பொழுதும் போல் வழக்கமான சோதனைகள் செய்யப்பட்டது. அவனிடம் சில அசாதாரண விஷயங்கள் தென்பட்டதையும் அவனின் பெற்றோர்கள் மருத்துவரிடம் கூறினர். இதனால் மேற்கொண்டு சில பரிசோதனைகள் நடத்தப்பட்டது. எல்லா பெற்றோர்களைப் போலவே சாலினியும் அவரது கணவரும் பரிசோதனை முடிவுக்காக பரபரப்பாக இருந்தார்கள். தங்கள் குழந்தைக்கு எதுவும் இருக்கக் கூடாது என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டனர். ஆனால் பரிசோதனை முடிவு அவர்கள் வாழ்க்கையையே மாற்றி விட்டது.

ஆமாம். அவர்களின் குழந்தை பிறக்கும்போதே இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. சாலினியால் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதை குணப்படுத்த உடனே இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். இதுமட்டுமே அந்த பிஞ்சு குழந்தை சந்தோஷமாக வாழ்வதற்கான ஒரே வழி.

எங்கள் மகனை காப்பாற்ற இதய அறுவை சிகிச்சை:

இந்த இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு 4 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. சாலினியின் கணவர் ஒரு ரெஸ்டாரென்டில் பணியாளராகப் பணிபுரிகிறார். இவரின் மாத வருமானம் வெறும் 10000 ரூபாய் தான். அதில் தன் குடும்பத்தையும் நடத்தி தன் குழந்தை பிறப்பிற்காகக் கொஞ்சம் சேர்த்தும் வைத்து இருந்தார். அந்த பணம் முழுவதும் குழந்தை பேறுக்கும், மருத்துவமனை பயணத்திற்கும், செக்கப்பிற்குமே சரியாகி விட்டது. என் குழந்தையைக் காப்பாற்ற என்னிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்களையும் விற்று விட்டேன். ஆனால் அவனை காப்பாற்ற போதுமான பணம் இல்லாமல் போராடி வருகிறேன் என்று அவர் கூறுகிறார்.

என் குழந்தை மிகவும் தைரியமானவன், ஒவ்வொரு நொடியும் அவனுக்கு ஏற்படும் வலியை தாங்கிக் கொண்டு போராடி வருகிறான். பெற்றோராக நாங்கள் அவன் வாழ்க்கையை மீட்டெடுக்க அவனுடன் நாங்களும் போராடி வருகிறோம். எங்கள் சந்தோஷம் நிலைத்திடாதா என்ற ஏக்கம் இன்றும் எங்கள் மனதில் கண்ணீர் மல்க நிற்கிறது.

உதவிக் கரம் நீட்டுங்கள்:

சாலினியின் ஒரு வயது குழந்தை இதய அறுவை சிகிச்சைக்காக போராடி வருகிறது. அவனின் பெற்றோர்களும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று எல்லார் உதவியையும் நாடி விட்டனர். இருப்பினும் அறுவை சி‌கி‌ச்சைக்கான பணத்தை புரட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களுடைய சாப்பாட்டு செலவையும் குறைத்து ஒரு நேரம் மட்டுமே அவர்கள் சாப்பிட்டு வருகிறார்கள். எப்படியாவது தங்கள் குழந்தையைக் காப்பாற்றி விடலாம் என்பதே அவர்களின் உறுதியாக இருக்கிறது. அவர்களின் சந்தோஷம் நிலைக்க நீங்களும் உங்கள் உதவிக் கரங்களை நீட்டலாம்.

உங்களுடைய சிறிய உதவி அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாகும். கடவுளுடன் சேர்ந்து அந்த குழந்தையை காப்பாற்ற நாமும் கை கொடுப்போம். ஒரு பெற்றோரின் முகத்தில் புன்னகை பூப்பதாக உங்கள் உதவிகள் இருக்கட்டும். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் வாட்ஸ் அப், முகநூல் மூலம் தெரிவியுங்கள். இதுவும் நீங்கள் செய்யும் சிறிய உதவியே !

இங்கு க்ளிக் செய்க

Have a great day!
Read more...

English Summary

Shalini barely had a chance to name their child before he was diagnosed with a congenital heart disease. Their one-month-old baby needs a heart surgery to live.