திருமாவளவன், ராகுல் காந்திக்கு தெரிந்தது.. ஸ்டாலினுக்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி?

  • சென்னை: தவெகவுக்கு பெரிய அளவிலான ஆதரவு அலை இருப்பது தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தெரிந்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவனுக்கும் தெரிந்துள்ளது. அத்துடன் திருமாவளவனுக்கு தொங்கு சட்டசபை வரும் என்கிற அளவில் தெரிந்திருக்கிறது. இதெல்லாம் திமுகவிகு எப்படி தெரியாமல் போனது.. எப்படி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியாமல் போனது என திமுக ஆதரவாளர்கள் சிலரே இப்போது பதிவிடுகிறார்கள்.

    Advertisement

    2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு தவெக தலைவரும் முதல்வருமான விஜய், அன்றைக்கு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளான விசிக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று அழைப்பு விடுத்தார். இதில் காங்கிரஸ் மிகவும் விரும்பியது. எப்படியாவது தவெக பக்கம் சேர்ந்து கூட்டணி அமைத்துஅதிக இடங்களில் போட்டியிடலாம் என்றே நினைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு விஜய்யின் தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன்படியே காங்கிரஸ் மேலிட தலைவர்களும் கருத்துக்களை கூறி வந்தார்கள்.

    Advertisement

    ராகுல் ஆதரவாளர்கள் விருப்பம்

    காங்கிரஸில் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஜோதிமணி எம்பி, திருச்சி வேலுச்சாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் தவெக உடன் கூட்டணி அமைக்க ஆதரவு கருத்துக்களை கூறி வந்தார்கள். எனினும் பா சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருந்தனர்.

    காங்கிரஸ் தந்த ட்விஸ்ட்

    திடீரென கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யையை நம்பி போய் தோல்வியடைய வேண்டாம் என்று எச்சரித்து, திமுக கூட்டணியிலேயே தொடர்ந்தனர். 28 தொகுதிகளை திமுகவிடம் வாங்கி போட்டியிட்டனர். ஆனால் ஐந்தில் தான் வென்றனர். வென்ற அன்றே தவெக ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாறினார்கள். மறுநாளே தவெகவிற்கு முதல் ஆளாக ஆதரவு அளித்தனர். இது திமுக சற்றும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    திருமாவளவனுக்கு தெரிந்துள்ளது

    அதேபோல் விசிக தலைவர் திருமாவளவன் தேர்தலுக்கு முன்பு விஜய் உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவரது சொந்த கட்சியினர் பலரே அவருக்கு அழுத்தம் தந்தனர். ஆனால் அவர் மசியவில்லை.. திமுக உடன் இருப்பது கொள்கை கூட்டணி என்று கூறினார். ஆனாலும் அவரது நிலைப்பாடு விசித்திரமாக இருந்தது. அவர் சிதம்பரம் தொகுதியில் எம்பியாக இருந்தபோதிலும், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடிவு செய்தார்.

    கைவிட்ட திருமாவளவன்

    திருமாவளவனுக்கு தொங்கு சட்டசபை ஏற்படும் என்று தெரிந்தே, சட்டசபை தேர்தலில் நிற்க விரும்பினாராம். ஆனால் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததை திமுக ரசிக்கவில்லை.. கடுமையாக எதிர்வினையாற்றியது. இதனால்வேறுவழியின்றி, கடைசி நேரத்தில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடும் முடிவினை கைவிட்டார்.

    Advertisement

    திருமாவளவன் அமைச்சராகி இருப்பார்

    ஒருவேளை அவர் நினைத்தது போல் போட்டியிட்டு வென்று இருந்தால், நிச்சயம் அமைச்சராக இருந்திருப்பார். இப்போதும் அவர் அமைச்சராக அதிக வாய்ப்பு இருக்கிறது. திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வென்று அமைச்சராக விரும்பினால், அதற்கு தவெக தலைவரும் முதல்வருமான விஜய் சம்மதிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

    திமுகவிற்கு தெரியாமல் போனது எப்படி

    இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், தவெகவுக்கு பெரிய அளவிலான ஆதரவு அலை இருப்பது தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தெரிந்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவனுக்கும் தெரிந்துள்ளது. அத்துடன் திருமாவளவனுக்கு தொங்கு சட்டசபை வரும் என்கிற அளவில் தெரிந்திருக்கிறது. இதெல்லாம் திமுகவிகு எப்படி தெரியாமல் போனது.. எப்படி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியாமல் போனது என திமுக ஆதரவாளர்கள் சிலரே இப்போது பதிவிடுகிறார்கள்.

    Advertisement

    ஸ்டாலினிடம் மறைத்த நிர்வாகிகள்

    அதேநேரம் ஸ்டாலினிடம் கள நிலவரத்தை சொல்ல அவரை சுற்றியுள்ள மேலிட தலைவர்கள் தயங்கினார்களா.. அல்லது அவர்களுக்குகே தெரியாமல் நடந்ததா என்று சில திமுக ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. ஸ்டாலினே கொளத்தூரில் தோற்கும் அளவிற்கு நிலைமை கைமீறி போயிருக்கிறது என்றால், எப்படி வியூக வகுப்பாளர்களுக்கு தெரியாமல் போனது என்றும் கேட்கிறார்கள்..

    விஜய் போட்டியிடுவது திமுவிற்கு சாதகம் என்ற நம்பிக்கை

    விஜய் தனித்து போட்டியிடுவது திமுகவிற்கே சாதகம். திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பார்.. அந்த வாக்குகளால் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.. அதிமுக காணாமல் போகும் என்று திமுக தலைவர் ஸ்டாலினை நம்ப வைத்தது யார் என்றும் கேட்கிறார்கள்.. ஏனெனில 2021ஐ ஒப்பிடும் போது அதிமுக ஓரளவு வென்றுவிட்டது. அதிமுகவை ஒப்பிடும் போது, திமுக பறிகொடுத்தது தான் அதிகம்.

    Advertisement

    திமுகவின் வாக்குகளை கைப்பற்றிய விஜய்

    அப்படி பார்த்தால் திமுகவின் வாக்குகளை தான் மொத்தமாக விஜய் கைப்பற்றி உள்ளார் என்றும், திமுகவின்கோட்டையான சென்னையில் 16க்கு 14 இடங்களை வென்றதே இதற்கு சாட்சி என்றும் அதிர்ச்சியுடன் விவரிக்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள் சிலர். ஆனால் இதுபற்றி யோசிக்காமல் இன்ஸ்டாவால் தோற்றுவிட்டதாக கூறுவது ஏற்க முடியாத தியரி என்றும் கூறுகிறார்கள்.

    English Summary

    Vijay 2026 election : How is it that what was known to Thirumavalavan and Rahul Gandhi remained unknown only to mk Stalin?