தவெகவிற்கு குட்பை? ஆதரவை வாபஸ் வாங்கும் இந்திய கம்யூனிஸ்ட்? மூத்த தலைவர் முத்தரசன் குட்டிக்கதை


  • திருவாரூர்: ''ஆற்றுப்படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். இந்த பக்கத்தை விட அந்த பக்கம் கொஞ்சம் பசுமையாக தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்கள். முதலில் ஒரு குதிரை போகும். அடுத்து ஆடு போகும். ஒரு மாடு போகும். பிறகு மந்தையே போய்விடும். அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். இங்கையாவது கொஞ்சமாக பச்சை தெரியும். ஆனால் அங்கு ஒன்னுமே இருக்காது. ஆஹா வந்துவிட்டோமே. வந்த உடனே திரும்பினால் அந்த படுகை ஏத்துக்குமா? ஏத்துக்காதா? என்ன பண்றது.. கொஞ்ச நாளாவது இருந்துவிட்டாவது போவோமே என்று இப்படியான சூழல் உள்ளது'' என்று திமுக கூட்டணியை விட்டு தவெக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ள நிலையில் அதன் மூத்த தலைவர் முத்தரசன் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

    Advertisement

    திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதிவாணன் இல்ல திருமண விழா திருவாரூரில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    Advertisement

    இந்த திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரும், மூத்த தலைவருமான முத்தரசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ''நான் அதிகமாக பணி புரிந்த அமைப்பு விவசாய சங்க அமைப்பு தான். அந்த அமைப்பின் மாநில செயலாளராக பணியாற்றி வரும் நல்ல நண்பர். எல்லாவற்றையும் காட்டிலும் கொள்கை பற்று கொண்டவர். ஆற்றுப்படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும். அங்கேயே தான் மேயும். திடீரென அந்த பக்கம் கரையை பார்க்கும். இந்த பக்கத்தை விட அந்த பக்கம் கொஞ்சம் பசுமையாக தெரியும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்கள்.

    Advertisement

    முதலில் ஒரு குதிரை போகும். அடுத்து ஆடு போகும். ஒரு மாடு போகும். பிறகு மந்தையே போய்விடும். அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். இங்கையாவது கொஞ்சமாக பச்சை தெரியும். ஆனால் அங்கு ஒன்னுமே இருக்காது. காய்ந்து போய் கிடைக்கும்.

    சரி வந்தாச்சு.. வந்த உடனே திரும்பினால் அந்த படுகை ஏத்துக்குமா? ஏத்துக்காதா? என்ன பண்றது.. கொஞ்ச நாளாவது இருந்துவிட்டாவது போவோமே என்று இப்படியான சூழல் உள்ளது. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை. தப்பாக நினைக்க வேண்டாம். பொதுவாக தான் சொல்கிறேன்'' என்றார்.

    Advertisement

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான முத்தரசனின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது. தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 2 தொகுதிகளில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் அதன்பிறகு தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கவில்லை. வெளியில் இருந்து மட்டுமே தவெகவிற்கு ஆதரவு வழங்கி வருகிறது.

    இப்படியான சூழலில் தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான முத்தரசன், ''இக்கரைக்கு அக்கரை பச்சை. ஆனால் அங்கு ஒன்னுமே இருக்காது. காய்ந்து போய் கிடைக்கும். சரி வந்தாச்சு.. வந்த உடனே திரும்பினால் அந்த படுகை ஏத்துக்குமா? ஏத்துக்காதா? என்ன பண்றது.. கொஞ்ச நாளாவது இருந்துவிட்டாவது போவேமே என்ற சூழல் உள்ளது'' என கூறியுள்ளார். இதனால் தவெகவிற்கு ஆதரவை விரைவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாபஸ் பெறுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    CPI Mutharasan: "the grass is always greener on the other side.' First, a horse goes over, followed by a goat and a cow; eventually, the entire herd crosses. Yet, upon arrival, the situation proves worse than before. At least here, there is some visible greenery, but over there, there is nothing-just parched land. It is a situation where they think", These remarks by Mutharasan, a senior leader of the Communist Party of India (CPI)-which has left the DMK alliance to join TVK-have sparked a stir.